பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409 இவ்வூரினராகிய அமைச்சர் திரு.செ. மாதவன் முயற்சியால் 1968 முதல் இவ்வூர் முன்னேற்ற மும் அடைந்திருக்கிறது. குடியிருப்பு வீடுகள் அடங்கிய சுந்தரம்நகர் என்ற புது நகரும், பாலாற்றிலிருந்து குடிதண்ணீர் வசதியும் மருத்துவமனையும் மகளிர் உயர் நிலைப் பள்ளியும், ஆடவர் உயர் நிலைப்பள்ளிக்குப் புதிய கட்டிடமும் ஏற்பட்டுள்ளன. தொழிற்பேட்டை அமைந்து வருகிறது. மதுரை ரோட்வேஸ் நிறுவனத் தாரால், நெடுங்காலமாக இவ்வூர் பஸ் போக்குவரத்து வசதி பெற்றிருக்கிறது. கிருங்காக்கோட்டையிலும் மேலப் பட்டியிலும் மர மேறும் இனத்தவர் வாழ்கின்றனர். தென்னந்தோப் புக்களும் உள்ளன. பனை ஓலைகளைக் கொண்டு பல பொருள்கள் மிடையப் படுகின்றன. சதுர்வேத மங்கலம்; இந்நாளில் மட்டியூர் என வழங் கும் இவ்வூர் நான்கு வேதங்கள் படித்த கோடி அந்தணர்க்கு மானியமாக விடப்பட்ட ஊர் என்பது பெயரிலிருந்தே தெரியும். இவ்வூர் வழியாகவே, பிரான்மலைக்குச் செல்ல வேண்டும்.(10கி.மீ.). குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த ருத்ரகோடீசுவரர் ஆத்மநாயகி கோயில் இவ்வூரில் இருக் கிறது. இந்த அம்மனுக்கு இந்நூலாசிரியரின் முன்னோர் கள் ராஜகோபுரம் கட்ட விரும்பினர். இறைவியின் இசைவு கிடைக்கவில்லை. எனவே அந்தத் தொகையைக் கொண்டு இறைவிக்குத் தங்கக் கவசம் செய்து வழங்கி யுள்ளனர். விழாக்கள் - திருவாதிரை, மாசிமகம். சாம்பிராணி எடுக்க உதவும் மட்டிப்பால் தரும் மரங்கள் நிறைந்திருப்பதால் மட்டியூர் எனப் பெயர் பெற்றுள்ளதாகக் கூறுவர். -26