எருமைப்பட்டி: மதுரை மாவட்ட 411 - சாலையில் திருப்பத்தூர் - மதுரைச் எல்லையிலுள்ளது. புறாக்கூட்டு மலை அடிவாரத்தில் 30 ஏக்கர்ப் பரப்பில் மட்டும். ஆண்டு தோறும் மூன்று போகம் விளைய வழி செய்து மழை பெய்கிறது. மலையிலுள்ள ஐயனாரின் அருளால் அங்கு இவ்வாறு மழை பெய்வதாகச் சிலர் கூறுவர். அப்பகுதியில் இருக் கும் நீர்ச்சத்துள்ள ஒருவகைப் பூண்டில் காற்றுப்பட்ட தும் அது மழையாகக் கொட்டுகிறது என்பர் வேறு சிலர். குறிப்பிட்ட 30 ஏக்கர் நிலம் மட்டும், இப்பயனைப் பெறுவது ஒரு விந்தையே. ஏரியூர் : மாம்பட்டி ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்தது. உப்பாற்றின் கரையிலும் முருகன் கோயி லமைந்த குன்று ஒன்றின் அடிவாரத்திலும் அமைந்து வேளாண்மை வளம் கொழிக்கிறது. கீழவளவிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் திருப்பத்தூலிருந்து 17கி.மீ. தொலைவிலும் உளது. குன்றின் மீதுள்ள கோயில் விளக்கு, இரவில் 15 கி.மீ. தொலைவுக்கு தெரிகிறது. கண்மாய் என்ற நீர் நிலைப் பெயர் இராமநாதபுர மாவட்டமெங்கும் வழங்க, இங்கு ஏரியூர் என அமைந் திருப்பதிலிருந்து, சோழர் காலத்தில் இவ்வூரோ ஏரியோ ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத இடந்தரு கிறது. ஜெயங் கொண்டான் நிலை என்னும் ஊர் இவ்வூரருகே இருப்பது என் கருத்துக்கு மேலும் ஆதர வாகும். பெரியமருது இவ்வூருக்கு வந்ததாகவும் அன்று அவர் ஏற்படுத்திய கட்டளைப்படி இன்றும் பங்குனி உத்தர நாளில் மருதுவின் பெயரால் இவ்வூர்க் கழுகு ஐயனார் கோயில் அஷ்டோத்திர ஜபம் நடைபெறு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/413
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை