412 வதாகவும் கூறுகின்றனர்.38 கண்மாய் களுக்குப் பயன் படுமாறு இங்கு காங்கிரஸ் ஆட்சியில் மாணிக்கம் கால் வாய் ஒன்பது கி.மீ. நீளத்துக்கு வெட்டப் பெற்று இப் பகுதிக்குப் பெரியாற்று நீர் பாய்ச்சப் பெற்றது. சத்துருசங்காரக் கோட்டை: இது திருப்பத்தூர் மதுரைச் சாலையிலுள்ள சிற்றூர். பெயர்க் காரணம் செம்மையாகத் தெரியவில்லை. இந்நாளில் எஸ். எஸ். கோட்டை என வழங்குகிறது. இங்கு முறையூர் வள்ளல் சண்முகனார் குடும்பத்தார் அமைத்த சத்திரம் உளது. டாக்டர் உ.வே.சா.ஐயரவர் களும் கஞ்சிகாமகோடி பீடம் பெரியவர்களும் தங்கிய பெருமையுடைய பெரிய சத்திரம் இது. புலவர் பலர் இங்கே தங்கிஇச் சத்திரத்தைப் பாடியுள்ளனர். கதலிக்கா யின்கறியும் கத்தரிக்காய்க் கூட்டும் பதமான மாவடுவும் பாங்காய் - இதமாகும் நுண்மையொடும் உண்டோம்- பொன் - நூல் உணர் வாழ்முறைசைச் சண்முகனார் சத்திரத்தில்தான் அரளிப்பாறை: மருதிப்பட்டிக்கு அருகே ஒரு பாறை யின் அடிவாரத்தில் அமைந்த சிற்றூர். பாறைமீது சிறியதொரு முருகன் கோயிலுள்ளது. கார்த்திகை நாட்களில் இங்கு மக்கள் கூடுவர். பாறை செங்குத்தாக ஓங்கி உயர்ந்திருக்கவும் இல்லை. தட்டை யாகவும் இல்லை. மக்கள் ஏறிச்செல்ல வசதியாக அமைந்தது. தெற்கு வடக்கில் ஈராயிரம் அடிநீளம். கிழக்குமேற்கில் முந்நூறு அடி அகலம், நூறு அடி உயரம் உள்ளது. பாறையின் உச்சி யானையின் முதுகைப் போல இருபக்கமும் கரைவாக இருப்பதால், மழைநீர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/414
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை