413 தேங்காமல் வழிந்தோடி விடுகிறது. பாறை எப்பொழுதும் தூய்மையாயும், வெள்ளை வெளே ரென்றும் காட்சி தருகிறது. பாறைக்குக் கிழக்கே ஆறு சதுரக்கல் பரப்புக்குப் பரந்த சமவெளி உண்டு. இச் சமவெளி முழுவதும் வானம் பார்த்த பூமியாதலால், மழைக்காலத்தில் மட்டும் புன்செய் வேளாண்மை நடை பெறும். கோடைக்காலத்தில் அது தரிசாகக் கிடக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பனைமரங்கள் தென்படும். இப்பாறையையும் இச்சமவெளியையும் சேர்த்துப் பார்க்கும்போது, இயற்கையாக அமைந்த விளையாட்டரங்கைப் (Stadium) போலவே காட்சிதரும். இம்மாதிரி இயற்கை எழிலுடன் கூடிய ஒரு பாறையும்; அதை ஒட்டிய பரந்த மைதானமும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்தால், பிரபலமான சர்வதேச தேச (Olympics) விளையாட்டிடமாக ஆக்கியிருப் இராணுவ ஒத்திகைகளுக்கும் பார்கள்; போலீசார் பயிற்சி பெறவும் பயன்படுத்தியிருப்பார்கள். 'பென்ஹர்' போன்ற வரலாற்றுப் புகழ்பெற்ற திரைப்படங்களை உருவாக்க ஏற்ற பந்தய முதலாளிகள் தேர்ந்தெடுத்திருப்பார்கள். மதுரை, மைதானமாகக்கூட, பட ஏறு இராமநாதபுர மாவட்டங்களில் தழுவுதல் என்னும் மஞ்சிவிரட்டுத் திருவிழா புகழ் பெற்றது. இந்த விளையாட்டுக்கு மஞ்சிவிரட்டு என்றும், சல்லிகட்டு என்றும், வாடிவாசல் என்றும் மாவட்டங்கள் தோறும் பல பெயர்கள் உண்டு. வேளாண்மை முடிந்த பிறகு, பொழுதுபோக்க அமைந்த விழாக்களுள் ஒன்று. மதுரை மாவட்டத்தில் வெள்ளலூர் அருகேயுள்ள உறங்காம்பட்டி மஞ்சிவிரட்டும், இராமநாதபுர மாவட்டத்தில் சிறாவயலிலும் அரளிப்பாறையிலும் நிகழும் மஞ்சிவிரட்டுக்களும் புகழ்பெற்றவை. புதுக்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/415
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை