பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423 கோவில் இருந்ததாகத் தெரிகிறது. அணைக்கரைப் பட்டியை அடுத்து 'விழுப்புணிக்களம்' என வழங்கும் விழுப்பரையன் நல்லூரில் சோழர் கோவில் 14-ஆம் நூற்றாண்டில் இருந்ததாயும் அதை இடித்து, கிழக் கிந்தியக் கும்பெனி பாலாற்றில் அணை கட்டியதாயும் தெரிகிறது. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் காரைக்குடி உள்வட்டத்தின் கிழக்குப் பகுதியி லுள்ள 5 பேரூராட்சிகளும் 26 ஊராட்சி மன்றங்களும் கொண்டது. முன்னேற்றத்திற்கு அறிகுறியாகச் சாலை களும் மாளிகைகளும் ஆங்காங்கே காணப்படினும் வேளாண்மைத் துறையில்கூட பின் தங்கியிருக்கிறது. திருச்சி- காரைக்குடி, அறந்தாங்கி - காரைக்குடி இரயில் பாதைகள் இவ்வொன்றியத்தின் வழியாகச் செல்லுகின்றன. ஒன்றியத்தின் அலுவலகம் சாக் கோட்டையில் இருக்கிறது. அறந்தாங்கி (தஞ்சை மாவட்டம்), திருமெய்யம் (திருச்சி மாவட்டம்), திருப்பத்தூர், கல்லல் ஒன்றியங் களும் காரைக்குடி நகரமும் இவ்வொன்றியத்தைச் சுற்றியுள். பல கோவில்களும், ஒரு நூலாலையும், பாத்திரத் தொழிற்சாலையும், கால்நடைப் பண்ணையும், மகளிர் கல்லூரியும், பல்தொழில் கல்லூரியும் இவ் வொன்றியத்தில் உள்ளன. பாலை மரம் இவ்வொன்றியத்தில் மிகுதி. இம் மரத்துப் பழம், வேப்பம் பழம் போன்றது; இதில் பால் மிகுதியாக இருக்கும். இந்த மரம் இறை உருவங்கள் செய்ய ஏற்றது. செட்டி நாட்டு மாளிகைகளின் முகப்பில் காணப்படும் கலைப் புகழ் பெற்ற 'நிலை'கள் பெரும்