4°5 ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் ஆகியோர் (பிரிட்டிஷ் ஆட்சியில்), இந்தியா சட்டசபையிலும் உரிமை பெற்ற இந்தியாவில் அரசியல் நிர்ணய சபை யில் ராஜாமுத்தையா செட்டியாரும் இந்தியப் பாராளு மன்றத்தில் நாகப்ப செட்டியாரும் R. இராமநாதன் செட்டியாரும் உறுப்பினராக இருந்திருக்கின்றனர். அண்ணாமலை அரசர். பெத்தாச்சி வள்ளல், மு.ராம. இராமசாமி செட்டியார் ஆகியோர் முறையே காரைக்குடி. கரூர், சிதம்பரம் நகராண்மைக் கழகங் களின் தலைவராயும், சிவிசிடி வேங்கடசலனார் மாவட்டக் கழகத் தலைவராயும் இருந்தனர். சென்னையின் மேய ராக ராஜா முத்தைய செட்டியாரும் அவர் தம்பிமார் இருவரும் கொழும்பு மாநகரத் துணை மேயராக நா.மு.சுப்பையா செட்டியாரும் இருந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பில் உயர் அலுவலராக உள்ள டாக்டர் ஏ. அழகப்பன் இவ்வூரினரே. வங்கி, இன்சூரன்ஸ் கம்பெனி, வணிகர் மாமன்றங் கள் ஆகியவற்றை ஆக்கவும் வளர்க்கவும் வல்லார் பலர் இவ்வூரினரே. கவியரசர் பாரதியாரால் பாராட்டிப் பாடப் பெற்ற வள்ளல் வை.சு.சண்முகனாரும் இவ்வூரினரே. மின்சாரக் குழுவின் பெரியதொரு அலுவலகமும் அரசினர் மருத்துவ மனைகள் இரண்டும், கால்நடைப் பண்ணையும் உள்ளன. ஊரருகே உள்ள பெரிய கோயில், மிகவும் புகழ்பெற்றது. சிறந்த முறையில் தெப்பத் திருவிழா நிகழ்கிறது. பள்ளத்தூர்: காரைக்குடி - புதுக்கோட்டைச்சாலையி சிறு நகரம். அமைப்பால் - மேட்டூர்போல. பெயர் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு தெரு லுள்ள இவ்வூர் -27
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/427
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை