428 விலும் ஒரு வீட்டின் தரைமட்டம் அடுத்தடுத்த வீடு களின்மாடி மட்டமாக இருக்கும். இவ்வாறு ஒன்றை விட ஒன்று பள்ளத்தில் இருக்கும் காட்சி ஊரின் தள நிலையையும் பெயர்க்காரணத்தையும் உணர்த்தும். 1921- இல் இவ்வூரில் பெரியார் ஈ. வே. ரா. தலைமை யில் காங்கிரஸ் அரசியல் மாநாடு நடைபெற்றது. 1936-இல் பள்ளத்தூர்த் தொகுதியிலிருந்து இராம நாதபுர மாவட்டக் கழகத்துக்கு நடைபெற்ற தேர்தல் அனைத்திந்திய முக்கியத்துவம் பெற்றது. தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் பணிபுரிந்த அ. மு.மு.முருகப்ப செட்டியார் இவ்வூரினர் ஆவார். இவ்வூர் எல்லையில் கொத்தடி என்னுஞ் சிற்றூர் இருக்கிறது. இது கொற்றவை என்ற சொற்றொடரின் மரூஉவாக இருக்கலாம். அம்மைக்குக் கொற்றவை என்ற பொருள் பல நூற்றாண்டுகளாக வழங்கி வருகிறது. இங்குள்ள சோலையாண்டவர் கோயில் இப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டன்று இங்கு பூச்சொரிவிழா சிறப்பாக நடை பெறுகிறது. சுற்றுவட்டமெங்கும் சோலை, சோலை யப்பன், சோலைச்சி என்ற பெயர்கள் இடப்படு கின்றன. சித்திரைப் பவுர்ணமியன்று மூன்று கி.மீ. தொலைவி லுள்ள ஒரு சிற்றூரிலிருந்து 'குதிரை'களைச் சுமந்து வந்து, சோலையாண்டவர் கோவில் திருவிழா நடத்துவர். கொத்தடி ஐயனா? பிரமச்சாரி. பெண்கள் சந்நிதி முன்நின்று பார்ப்பதில்லை. வரதரான தெய்வம். வெள்ளிக்கிழமைகளில் அடியார்கள் நூற்றுக்கணக்கில் கூடி, வழிபடுகின்றனர். பழைய கோவிலைப் புதுப்பிக்க இறைவன் சந்நிதியில் உத்தரவு கொடுக்கவில்லை. முன்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/428
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை