பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 விசயாலயத்தேவன் அதை மீண்டும் கட்டினான். அவனுடைய திருவுருவமும் அவன் குடும்பத்தினரின் திருவுருவங்களும் கோயில் தூண்களில் சித்திரிக்கப்பட் டிருக்கின்றன. ஆடாத செக்கும் கூவாத சேவலும் ஈணாத வாழையும் வாழாத பெண்ணும் ஒத்தைக்கால் மண்டபமும் இவ்வூரில் புகழ்பெற்றவை. இக்கோவிலை வழிபட்டு வந்த நகரத்தார்கள் தங்கள் விருப்பம்போலத் திருப்பணியும் அன்றாட ஆட்சி யும் செய்ய வசதியாகத் தங்களுக்கென்று இங்கேயே ஒரு கோவிலைக் கட்டிக் கொண்டுள்ளனர். அக்கோயில் நகரச்சூரைக்குடி எனப்பெயர்பெற்று நகரத்தாருள் ஒன்பது பிரிவினருள் ஒரு பிரிவினரின் விளங்கிவருகிறது. இரு கோவில்களிலும் தேசிகநாதர். இறைவி ஆவுடைய நாயகி. கோயிலாக இறைவன் இத்தலத்துக்கு மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் யாத்த புராணம் உண்டு. மாற்றூர்: இவ்வூர் காரைக்குடியிலிருந்து 11 கி.மீ. தொலைவு.மாத்தூர் என வழங்குகிறது. கண்டனூருக் கும் அரியக்குடிக்கும் இடையே அமைந்து, நகரக்கோவி லால் புகழ் பெற்று வருகிறது. சங்ககாலப் புலவரான மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார் வூரினர். சங்ககால வணிகப் பெருமக்களான ஐந்நூற்றுவர் வழிபட்ட ஐந்நூற்றீசர் கோயில் இவ்வூரில் இருந்து வருகிறது. ஐந்நூற்றுவர் பற்றிய விவரம் இந்நூலாசிரி யர் எழுதிய 'செட்டிநாடும் தமிழும்' என்னும் நூலிற் காண்க. இங்கு, இறைவன்- ஐந்நூற்றீசர், இறைவி-- பெரியநாயகி.