பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 என்று திருவாசகம் போற்றும் தலம் இதுவே. இவ் வாறு அட்டமாசித்திகளின் இயல்பை இறைவன் புகட்டிய இடம். இவ்வூர்க் கோவில் ஆலமரத்தின் கீழுள்ள இடமாகும். கோவிலும் ஆலமரமும் காணத் தக்கன.அமாவாசை நாட்களில் இங்கு திரளான மக்கள் தீர்த்தம் ஆடுகின்றனர். செம் பொன்னூர்; கல்லல் அருகே உள்ள சிற்றூர். செம்பனூர் என்று ஊர்ப் பெயர் வழங்கிவருகிறது. மண்ணின் நிறம் அல்லது அப்பகுதியில் கிடைக்கும் புவியியல் பொருளை வைத்து ஊர்ப் பெயர்கள் உண்டா யின. பசும் பொன் என்ற ஓர் ஊரும் இம்மாவட்டத் தில் இருக்கிறது. கன்னியா குமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே செம்பொன்விளை புத்தன்துறையருகே செம்பொன்கரை என்னும் ஊர்களும், தஞ்சை மாவட்டம் மயூரம் பகுதி யில் செம்பொன்னார் கோவில் என்ற ஊரும், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஏழு செம்பொன் என்ற ஊரும் உள்ளன. தளக்காவூர்: இது பழமையான ஊர். வடக்குப் பார்த்த அதள நாயகி அம்மன் கோவிலும் 1,000 ஆண்டுக்கு முற்பட்ட கண்டவன நாதர் கோவிலும் சீர் குலைந்த நிலையில் இருக்கின்றன: கத்தோலிக்கத் தேவாலயமும் கூட்டுறவு முறையில் நிகழும் செங்கல் சூளையும் உள்ளன. இவ்வூரின் சிறப்பு இங்கு, சலங்கை மணல் கிடைப்பதாகும். இப்பகுதியில் நிலக்கரிப் படிவங்கள் உள்ளன. 1965-இல் தோண்டிப் பார்த்தனர். விவரம் முன்னரே கூறியுள்ளோம்.