442 இருக்கும் நிலங்களை ஏதாவது ஒரு வேளாண்மைக்குப் பயன்படுத்துவது இங்குள்ள மக்களின் இயல்பு. தங்கள் தேவைக்கு மட்டும் நெல் பயிரிட்டு, எஞ்சிய நிலத்தில் கம்பு, கேப்பை, மிளகாய், பருத்தி முதலியவற்றைப் பயிரிடுகின்றனர். இப்பகுதியில் ஹரிஜனங்களும் முற்போக்காக இருக்கின்றனர். மின்சார உதவியால் கிணற்றுப் பாசனம் பரவியுள்ளது. நாயக்க சமூகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேளாண்மையில் ஆர்வம் காட்டி வருவதோடு, வேளாண்மைச் செலவுக்குக் கடன்பெறாமல் ஒரு சிறு வேலையையேனும் ஏற்று மாதச் சம்பளம் பெற்றுவருவது பாராட்டுக்குரியது, பின்பற்றத் தக்கது. T இவ்வட்டத்தில் புறம்போக்கு நிலம் கிடையாது. தரிசாகக் கிடக்கும் நிலமும் இல்லை. மலையோ காடோ கிடையாது. ஒரு சில சிறு பாறைகளை மட்டுமே காண இயலும். பருத்தி, மல்லி, உளுந்து மூன்றையும் சேர்ந்தாற் போலப் பயிரிடும் வழக்கமும் நிலவிவருகிறது. உப்புத் தண்ணீர்தான் பெரும்பாலும் கிடைக் கிறது. ஊருணிக்குள் உள்ள கிணற்றிலிருந்து நீரை மொண்டு குடிக்கும் வழக்கம் பரவியிருக்கிறது. வட்டம் முழுதும் கரிசல் கிறது. மணற்பூமியாக இருக் பிழைக்கும் மக்கள் தீப்பெட்டித் தொழிலால் வட்டத்தில் உள்ள மொத்த ஊர்களில் பாதியில் உள்ளனர். இதனால் பிச்சை எடுப்பவர் எவரும் இங்கு ல்லை.சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தீக்குச்சி அடுக்கவோ, தீப்பெட்டி ஒட்டவோ இயலும்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/444
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை