பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 43 . சிவகங்கைச் சீமையின் சுதந்திரப் போரின் கடைசிக் கட்டம் 1801ஆம் ஆண்டின் இறுதியில் கீழவளைவு, பிரான் மலை,சிங்கம்புணரி, நத்தம் ஆகியஇடங்களில் நிகழ்ந்தது. ஏராளமான ஒற்றர்களைச் சுதந்தர உணர்ச்சியுள்ள வீரர் கள் வெட்டி வீழ்த்தினர். இறுதியாக ஊமைத்துரையும் மருது சகோதரர்களும் துரோகிகளின் துணையால் கைதி யாகித் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயர் அடைந்த வெற்றிகளுக்குப் பிறகு, 1801 டிசம்பர் 31-ஆம் நாள் திண்டுக்கல். இராம நாதபுரம், திருநெல்வேலி, மதுரை ஜில்லாக்களில் இருந்த கோட்டைகள்யாவும் தகர்க்கப்பட்டன. அனைவ ரிடமும் இருந்த துப்பாக்கிகளும் ஆயுதங்களும் பறி முதல் செய்யப்பட்டன. வீரபாண்டியக் கட்டப் பொம்மன் தொடர்புடைய கோட்டைகளில் திரு மெய்யம் கோட்டை மட்டும் தப்பிப் பிழைத்து இன்றும் நின்று நிலவுகிறது. முதல் ஜமீன்தாரணி நாயக்க மன்னர்களிடமிருந்து விடுதலை பெற்று, சுதந்தர நாடுபோல இருந்த இராமநாதபுரம் சீமை 1803-இல் வெறும் ஜமீன் ஆயிற்று. ஆண்டு தோறும் ஆங்கிலேயர்களுக்கு ரூ 3, 24, 404-3-10 கப்பம் கட்ட வேண்டுமென்ற நிபந்தனை ஏற்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடிகோலிய கிளைவ்பிரபு - ராணி மங்களேசுவரி நாச்சியாரை ஜமீன் தாரணியாக நியமித் தார். அவள் பிராமணர்களுக்கு 90 கிராமங்களை வழங் கினாள். மதுரைத் திருஞான சம்பந்தர் மடத்துக்குப் பெரும் பொருள் கொடுத்தாள். 1845 க்குப்பின் கப்பமாகக் கட்ட வேண்டிய பணம் சில ஆண்டுகள் கொடுபடாமல் இருந்ததாலும் ஏராள