பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 மிகச்சிறிதாகவும் படாடோபமின்றியும் இருக்கும். வெற்றிலைப்பாக்குக் கடையோ என்று நினைக்க நேரும். உள்ளே இடப்பரப்பு பெரிதாக இருந்தாலும், பாதை குறுகியதாகவே இருக்கும். இரயில் நிர்வாகத்தினர்க்கு விருதுநகர் நிலையத்தின் மூலம் பிரயாணிகளால் கிடைக்கும் வருவாயைவிடப் பொருள்கள் போக்குவரத்தால்தான் கூடுதலான வருவாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டிலேயே மிக நீள மான இரயில் மேடை (பிளாட்பாரம்)யும் சரக்கு ஏற்றும் இரயில் வண்டிகளை இங்கு நிறித்துவதற்கு மார்ஷலிங் யார்டும் அமைக்கப்பெற்றுள்ளன. இதற்கு ஒப்பாகப் பெரிய அளவில் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நடை பெறும் சந்திப்பு மக்கள் நெருக்கமுள்ள உத்தரப் பிரதேசத்தில் கங்கையால் வளமடைந்துள்ள மொகால் சராய் ஆகும். விருது நகரின் சுற்றுப்புறத்தில் அருப்புக் கோட்டை; சாத்தூர், திருமங்கலம் வரையிலும் கருங்கண்ணிப் பஞ்சு 20,000 கண்டி விளைகிறது. தமிழ்நாட்டில் கருங் கண்ணிப் பஞ்சு கிடைக்கும் ஏனைய இடங்கள் கோயம் புத்தூர்,கோவில்பட்டி, வடஇந்தியாவில் சூரத் ஆகிய பகுதிகள் தான். கருங்கண்ணி என்பது குறுகிய இழைப் பருத்தி (Short Staple Cotton) ஆங்கிலேயரும் ஜப்பானி யரும் விருதுநகரில் பருத்தி அறைக்கும் இயந்திரங்களை நிறுவி தங்கள் நாட்டுக்கு 1910 முதல் ஏற்றுமதி செய்து வந்திருக்கின்றனர். பஞ்சு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூலைச் சுற்றிவைப்பதற்குப் பயன்படும் அட்டைக்குழாய் செய் யும் இந்தியன் டெக்ஸ்டைல் பேப்பர் டியூப் கம்பெனி விருதுநகரில் நடைபெறுகிறது. இந்தத் தொழிற்