450 போரிங் பம்புகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சுருட்டுத் தொழிற்சாலை, சோப்புத் தொழிற்சாலைகள், ஐதராபாத்திலிருந்து வெள்ளைத் துவரையை செம் மண்ணில் ஊறவைத்துக் களத்தில் காயப்போட்டு பருப்பாக உடைத்து மூட்டைபோட்டு விற்பனை செய்யும் 54 தொழிற்சாலைகள், இரண்டு இருப்புப்பட்டறைகள், 20 கெசட்டட் அதிகாரிகளின் அலுவலகங்கள், பெரிய தொரு மருத்துவமனை, மூன்றுமைல் தொலைவிலுள்ள சூலக்கரையில் ஒரு நெசவாலை. இங்கிருந்து வெளிவருவது உள்ளூர் பற்றிய 'டெய்லி ரிப்போர்ட்' என்ற நாளிதழ். மார்க்கட் கனமான நீர்: நகருக்கு மேற்கே கெளசிக நதி என்ற காட்டாறு செல்லுகிறது. இந்நகரில் குடிதண்ணீர் கனமாக இருக்கிறது. மாரியம்மன் கோவில்: விருதுநகர் மக்களும், சுற்று வட்டத்திலுள்ள 96 சிற்றூர்களில் வாழும் மக்களும் குல தெய்வமாகக் கருதும் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் 21 நாள் திருவிழா நிகழும். தேர் புறப் பாட்டுக்கு முந்தின நாளில் நடைபெறும் தீச்சட்டிவிழா இந்தத் திருவிழாவுக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோலப் பெருஞ்சிறப்புடன் அமையும். அன்று மக்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி, தீபாவளித் திருநாளைக் கொண்டாடு வதுபோலக் கொண்டாடி மகிழ்வர். இந்நகர் பற்றிய பழமொழி: விருதுநகர் எதையும் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் எல்லாவற்றையும் வைத்திருக்கிறது. Virudhunagar produces nothing. But Controls Everything) கைக்குள் இந்நகரின் பெருமை; இந்தியாவெங்கும் இந்நகரினர் பரவியிருப்பது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/452
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை