451 இந்நகரின் ஏற்றுமதி: மிளகாய் வற்றல், சோடா தொழிற்சாலை வாயிலாகக் நல்லெண்ணெய், பல சரக்கு. மக்கள் தொகை: 70,000. தனமான தண்ணீர், சுற்று வட்டத்திலிருந்து வந்து போகிறவர் உட்பட, இந்நகரில் பலவகைத் தொழில்களில் வேலை பார்ப்பவர் தொகை 50,000 பாராட்டுக்குரியது: பிறர் பேச்சையும் ஏச்சையும் பொருட்படுத்தாது விடாமுயற்சியுடன் தங்கள் முன்னேற்றத்துக்கு உழைக்கும் மனப்பாங்கு. விருதுநகர் வாசிகளின் விருப்பம்: தங்கள் தங்கள் நகர், மாவட்டத்தின் தலைநகராக வேண்டும் என்பது. சிவகாசி நகர்: சிறிய ஜப்பான் என்று பெயர் பெற்று தொழில் துறையில் பெரிதும் முன்னேறியுள்ள நகரம் சிவகாசி. பல நூற்றாண்டுகளுக்குமுன் பாண்டியமன்னன் ஒருவன் தமிழ்நாட்டின் தென்கோடியில் சிவன்கோவில் நிறுவ, காசியில் சிவலிங்கம் எடுத்து வரும்வழியில் இங்கு எதிர் பாராத முறையில் அந்தச் சிவலிங்கத்தை நிலைநாட்டி அதற்குக் கோவில் எடுத்ததாயும் அதைச்சுற்றி அமைந்த நகர் சிவகாசி எனப்பெயர் பெற்றதாயும் கூறுகிறார்கள். இக்கோவில் நகரின் நடுவே அமைந்திருக்கிறது. திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. . கோவிலும், பிற்காலத்தில் பத்திரகாளியம்மன் மாரியம்மன் கோவிலும் ஏற்பட்டு நாடார் சமூகப்பெரு மக்களின் பேராதரவால் புகழ்பெற்றுள்ளன. மாசிமாதம் இவ்வூரிலிருக்கும் ஒவ்வொரு சின்னஞ் சிறு பூடத்துக்கும் விரிவான பூசைகள் நடத்தி சாமி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/453
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை