463 விட்டனர். அந்நிலையில் விருதுநகர் மக்கள் பெரிதும் முயன்று, அந்தத் திட்டத்தை விருதுநகர் - திருவனந்த புரம் பாதையாக மாற்றினர். இவ்வாறே 1960-இல் மானாமதுரை -- முதுகுளத்தூர் தூத்துக்குடி இரயில் பாதைத் திட்டம், மானாமதுரை - விருதுநகர் திட்டமாக் கப்பட்டது. ஆங்கிலேயர் - ஆட்சியில் பருத்தி அறைக்கும் ஆலைகளை ஜப்பானியர் ஏற்படுத்தினர். அவை 1941-இல் எதிரிகளின் சொத்து என ஏலம் போடப்பெற்று இந்தியா கைக்கு மாறி ஈஸ்டு இந்தியா கார்ப்பரேசன் என்ற பெயரில் நடந்து வருகின்றன. கல்வி: கல்வித்துறையில் இந்நகர் வருகிறது. நான்கு உயர்நிலைப்பள்ளி அனைவர்க்கும் பயன்படும் வண்ணம் முன்னேறி மாணவர் வசதியாக நுரையீரல் (T. B.) மருத்துவமனை கட்டப்பட்டிருக்கிறது. கல்வித்தந்தை திரு. இராமசாமிநாயுடு பெயரால் ஒரு கல்லூரி அமைக்க இவ்வட்ட நாயுடு சமூகத்தார் ஏற்பாடு செய்திருக்கின்றனர். தொழில்: ஆங்கிலேயர் ஆட்சியில் பருத்தி அறைக்க ஐந்து ஆலைகளும் தீப்பெட்டி ஆலைகளும் நிப் தொழிற் சாலைகளும் தொடங்கப்பெற்றன. 1886-இல் 3,000 மக்கள் வாழ்ந்த சாத்தூர் 1947-இல் 11,000 பேர் உள்ள சிறு நகர் ஆயிற்று. சுதந்திர இந்தியாவில் இத்தொழில் கள் மேலும் விரிவடைந்தன. தீப்பெட்டித் தொழிலுக்கு வேண்டும் சில இரசாயனப் பொருள்களும் செய்யப்படு கின்றன. சாலைப்போக்குவரத்து மிகவும் பெருகியிருக் போடப்பட்டிருக்கிறது கிறது. 'பை-பாஸ் ரோடு நாகர்கோவில்வரை விரைவுப் பேருந்துகள் அடிக்கடி செல்லுகின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/465
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை