, - 466 கோடையில் தினையும் அவுரிச் செடியும் பயிரிடுவர். அவுரிச்செடி உரத்தூளாகவும் வர்ணம் செய்ய மூலப் பொருளாகவும் உதவுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகிறது. சூலக்கரை: விருதுநகரையடுத்து! சாத்தூர்ச்சாலை சிவகாசிச்சாலை இரண்டுக்கும் இடையே வளர்ச்சி யடைந்துள்ள தொழில் நகரம் இங்கு விருதுநகர் டெக்ஸ்டைல்ஸ் என்ற நெசவு ஆலையும் விருதுநகர் ஸ்டீல் ரோலிங் மில்ஸ் என்ற எஃகு இருட்டுக் கம்பித் தொழிற் சாலையும் பெரியதொரு தொழிற்பேட்டையும் உள. சேடபட்டி; கைத்தறி நெசவாளர் மிகுதியாக உள்ளனர். துலுக்கப்பட்டி: விருதுநகர்க்குத் தெற்கே 15 கி.மீ. திருநெல்வேலிச் சாலையிலுள்ளது. அருகேயுள்ள எட்டூர் வட்டத்தில் சுண்ணாம்புக்கல் கிடைப்பதால் இங்கு சிமிண்டு ஆலை ஏற்பட்டிருக்கிறது. பவானி: விருதுநகர்க்கு வடமேற்கேயுள்ள சிற்றூர். பழத்தோட்டங்கள் நிறைந்தது. வடமலைக்குறிச்சி: விருதுநகர்க்கு வடமேற்கே 6கி.மீ. மக்கள் தொகை 1,500. 19.0 முதல் இங்கு 30 பேர் கொண்ட ஒரு கிராமசபையை ஆண்டுதோறும் தை மாதத்தில் கிராமத்தார் தேர்ந்தெடுக்கிறார்கள். அச் சபை தமிழ்த்திங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்தாம் நாளில் கூடி; ஊரிலுள்ள வழக்குகளை முடிவு செய்கிறது. இச்சபையின் உறுப்பினர்களும் தலைவர்களும் போட்டி யின்றித் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிரிட்டனின் வடபகுதியான ஸ்காட்லாந்துமக்களின் உதவியுடன் இவ்வூரில் பயிர்த்தொழில், சாலைகள், பள்ளி, மருத்துவநிலையம் ஆகிய யாவும் வளர்ச்சியடைந்துள.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/468
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை