பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

467 மருளுத்து: வளமான ஊர். நெல், வாழை, காய் சுறி முக்கிய பயிர்கள். இங்குள்ள பூங்கா பெயர் பெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை, இராஜ பாளையம், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றியங்கள் சூழ 302 ச.கி.மீ. பரப்பில் அமைந்த செழிப்பான பகுதி. இது திருத்தங்கல் பேரூராட்சியும் 54 ஊராட்சி மன்றங்களும் உடையது. மக்கள் தொகை 75,000. 1952-இல் பிரிக்கா அபிவிருத்தி திட்டமும் 1954-இல் சமுதாய நலத்திட்டமும் இங்கு நிறைவேற்றப்பட்டன. சிறு குன்றுகள் உள்ளன. காடுகள் அழிந்து விட்டன. மழை குறைவாக இருப்பதால், தீப்பெட்டித் தொழிற் சாலைகள் ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு வாழ்வு தருகின்றன. நடையனேரியில் கொல்லுப் பட்டறையும் பயிற்சிநிலையமும் மரத்தொழில் கூட்டுவுறச்சங்கமும் மாறநேரியில் தோல் பதனிடுவோர் கூட்டுறவுச்சங்கமும் அனுப்பங்குளத்தில் அரசினர் கோழிப்பண்ணையும் உள. மல்லிநாடு என்பது இப்பகுதியியின் தொன்மை யான பெயர். மதுரை நாயக்கர் ஆட்சியில் இங்கு கம்மவார் நாயடுக்கள் குடியேற்றப்பட்டனர். ஏரிகள் வெட்டப்பெற்றன, புன்செய்த் தானியங்கள் பயிரிடப் பெற்றன.வாழை, சேனை, கருணை, சேம்பு, சீனிக்கிழங்கு வெற்றிலை ஆகியவை குறிப்பிடத்தக்க விளை பொருள் கள். 1930க்கு முன் புகையிலை நனைத்தும் கைமனை வாயிலாய் பருத்தி அறைத்தும் நெல் குத்தியும் மக்கள் வாழ்ந்தனர்.