பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476 ஜெகவீரம்பட்டி: இந்த ஊராட்சி . மன்றத்தைச் சேர்ந்த சுப்பிரமணியபுரம் மிகவும் முன்னேற்றமான கிராமம் ஆகும்; திலகவதி மாதர்சங்கம் நன்முறையில் இயங்கி வருகிறது. இச்சங்கத்தார் (ஆடவர் ஒரு கொத்து, ஒரு தச்சு மட்டும் சேர்த்துக் கொண்டு) தாங்களே சங்கக் கட்டடத்தை 1969-இல் கட்டி முடித் திருக்கின்றனர். செல்வக் குடும்பத்து மகளிரும் உடலுழைப்பு உதலினர். இத்தகைய சில செய்கை களால் இவ்வூரின் வளர்ச்சி, வட்டார வளர்ச்சித் திட்டத் தின் வெற்றிக்குச் சான்றாகத் திரைப்படமாக எடுத்துக் காட்டப்படுகிறது. இவ்வூர் சரத்தூர் - தாயில்பட்டிச் சாலையில் இருக்கிறது. பனையடிப்பட்டி: து ஏழாயிரம் பண்ணைக்கு 5 கி. மீ. வடக்கேயுள்ளது. கொய்யாத் தோட்டமும் மிச்சைத் தோட்டங்களும் உள்ளன. எலு வலையபட்டி: இது 'கீழான் மறை நாடு' ஊராட்சி மன்றத்துக்கு உட்பட்டது.இச்சிற்றூரில் தாசரி என்ற சாதியார் வாழ்கின்றனர். இவர்கள் சோதிடம் சொல்ல ஆண்டுதோறும் ஆறு திங்கள் வெளியூர்களுக்குச் சென்று விடுவர். இவர்களிடம் வேடிக்கையான சமதர்மப் பழக்கங்கள் நிலவுகின்றன. ஏழாயிரம்பண்ணை: வரலாற்றுப் புகழ்பெற்ற இவ்வூர் சாத்தூரிலிருந்து தென்மேற்கே 9 மைல் (14கி.மீ.) தொலைவில் அமைந்தது. மக்கள்தொகை 4,500 ஆகும். ஊராட்சிமன்ற எல்லையில் 6500 மக்கள் உள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் இதுவே பெரிய ஊராக உளது. இங்கிருந்து இராஜபாளையம் ஏறத்தாழ 30மைல் (48கி.மீ) தொலைவு இருக்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லை இவ்வூரிலிருந்து 3 கி.மீ. தூரத்தில்