சேத்தூர் சோழபுரம் 481- பிரிக்காக்கள் அடங்கியுள்ள இராஜபாளையம் உள்வட்டம் தனி வட்டம் போன்றே இயங்கிவருகிறது. வட்டத்தின் மக்கள் தொகை நான்கு லட்சம் ஆகும். 1801-இல் ஸ்ரீ வில்லிபுத்தூர், சாத்தூர் ஆகிய இரு 67,510 மக்கள் வட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் வாழ்ந்ததும், 1972-இல் இராசபாளையம் நகரில் மட்டும் 80,000 மக்கள் வாழ்ந்து வருவதும் நம் நாட்டின் மக்கள் தொகைப் வேகத்தினை பெருக்கத்தின் உணர்த்தும். சிறு இயற்கை தொழில்கள் வளர்ச்சியால் சாத்தூரும், வளத்தாலும் தொழில் பெருக்கத்தாலும் ஸ்ரீ வில்லிபுத்தூரும் மிகுதியான மக்கள் வாழும் பகுதி களாக உள்ளன. இவ்விரு வட்டங்களிலும் வாழ்பவர் களில் வேளாண்மை வேலை தேடித் தஞ்சை மாவட்டத் திற்கோ பொருளீட்ட வெளிநாடுகளுக்கோ செல்லுவதில்லை. மதுரைச் எவரும் நாடாகிய சீமைக்கும் தென்பாண்டி திருநெல்வேலிச் சீமைக்கும் நடுவே அமைந்ததால் இப் பகுதி நடு மண்டலம் என்று நெடுங்காலம் பெயர் பெற்றிருந்தது. வில்லி மல்லி என்ற அரசர்கள் ஆண்டதால் வில்லி நாடு, மல்லி நாடு என்று இவ்வட்டம் இருபகுதிகளாகப் பெயர் பெற்றிருந்தது. ஸ்ரீ வில்லிபுத்தூர்க் கோவிலி லுள்ள கல்வெட்டுக்களில் ‘திரு வில்லிநாட்டு ஸ்ரீ வில்லி புத்தூர்,' 'திருமல்லி நாட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், திருமல்ல நாட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர்' என்ற சொற்றொடர்கள் காணப்படுகின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/483
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை