484 சப்பாணிப் பறம்பு, வாழைக்குளம் பறம்பு; கொத்தன்குளம் பறம்பு போன்று 'பறம்பு' என்ற ஈற்றுச் சொல்லுடைய ஊர்கள் இவ்வட்டத்தில் உள்ளன, இவையும் குன்னூர், சிங்கம்மாள் குரடு என்னும் ஊர் களும் மலைவளத்தின் சின்னங்களாக விளங்குகின்றன. கல்வி நிலையங்கள் பிற வட்டங்களுக்கு முன்னரே இங்கு ஏற்பட்டன. ஆனால் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், பிற வட்டங்களில் ஏற்பட்டதுபோல இவ் வட்டத்தில் கல்லூரி ஏற்படாதது ஒரு குறைபாடே. கேரளச் சீமையிலுள்ள கொல்லத்தை வென்றதால் ஏற்பட்ட சிறப்பை நினைவூட்டும் (கங்கை கொண்டான் போன்று) கொல்லம் கொண்டான்; வட்டத்தின் தென் எல்லையிலுள்ள சோழபுரம்; வற்றாயிருப்புக்கு அருகேயுள்ள சுந்தரபாண்டியம், சம்சிகாபுரம் அருகே யுள்ள சங்கரபாண்டியபுரம் ஆகிய இவ்வூர்கள் முறையே சேர, சோழ, பாண்டிய அரசுகளை நினைவூட்டுகின்றன. குறுநில மன்னர்களை நினைவூட்டுவது சேத்தூர். நாயக்க மன்னர் காலத்தில் ஏற்பட்டது அரியா நாதர் நினைவாக உருவான தளவாய்புரம், கிருஷ்ணன் கோயில், அழகர் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆகியவை வைணவ சமய மறுமலர்ச்சியால் புத்துயிர் பெற்றன; மங்கம்மாள் காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரை சாலை போடப்பட்டது. 1751-இல் லெப்டினன்டு இன்னிஸ் என்ற ஆங்கிலேய தளபதியின் படையுடன் நடந்த போரில், ஸ்ரீ வில்லி புத்தூர்க் கோட்டை, பூலித்தேவரது படையால் கைப் பற்றப்பட்டது. 1756 வரை இந்நகரும் சுற்றுவட்டமும் பூலித்தேவர் ஆளுகையிலேயே இருந்தன.பிறகு முகமது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/486
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை