பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ஆங்கிலேயரின் ஆட்சி முறையைப் பின்பற்றி தாலூகாக்கள் அமைக்கப் பெற்றன. சிவகங்கை, சோழ புரம், திருப்பத்தூர், சாக்கோட்டை, திருவேகம்புத்தூர், இளையாங்குடி, திருப்பூவணம், மானாமதுரை ஆகிய ஊர் களில் தாசில்தார்கள் நியமிக்கப்பட்டார்கள். வாசன் உட், குடுவா, R. M.சுந்தரம் ஆகியோரின் ஆட்சியில் 1680 சதுரமைல் பரப்புள்ள இந்த ஜமீன் நல்ல வருவா யுடன் விளங்கிற்று.8-ல் ஒரு பகுதி பெரியாறு, வைகை பாசனத்தில் இருந்ததால், நிதி நிலை நன்றாக இருந்தது. 15 லட்சம் ரூபாய் வரியை குடிகளிடம் இருந்து வசூலித் தனர். பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு 'பீஷ்குஷ' (Peish kush) ஆக 3 லட்சம் ரூபாய் கட்டி வந்தனர். எஞ்சிய பணத்தில் மூன்றில் ஒரு பகுதி கோவில்களுக்கும், 3-ல் ஒரு பகுதி சத்திரங்களுக்கும், 3-ல் ஒரு பகுதி அரசர் களின் சொந்தச் செலவுகளுக்கும் செலவழிக்கப்பட்டது. சத்திரங்கள் அனைத்துமே மருது சகோதரர்களால் கட்டப் பெற்றவை. அவற்றை மேற்பார்வை செய்யும் பொறுப்பு மட்டும் சிவகங்கை அரசர்களுக்கு உண்டு சத்திரக் கட்டிடங்களிலோ, அவற்றின் பணங்களிலிலோ சிவகங்கை அரசர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. பிற பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இராமநாத புர மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் மல்லி நாடு, வில்லி நாடு என்பவை குறிப்பிடத்தக்கவை. இவை இரு வேடர்களால் உண்டாக்கப்பட்டவை என்று கூறப் படுகிறது. வில்லியின் தலைநகர் இன்றைய ஸ்ரீ வில்லிபுத் தூர் என்றும் மல்லி நாட்டின் தலைநகரான மல்லி, (சிவ காசியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீ வில்லிபுத்