வலகம் 493 ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்டி கலெக்டர் பதவி ஒழிக்கப்பட்டு; ஐ.சி.எஸ்.பட்டம் பெற்ற அசிஸ்டன்டு எலெக்டர் அலு சிவகாசியில் ஏற்படுத்தப்பட்டு, அரசியல் முக்கியத்துவம் இழந்த ஸ்ரீவில்லிபுத்தூர் 1926-இல் இரயில் பாதை ஏற்பட்டதாலும், இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஏற்பட்ட கைத்தறித் தொழில் வளர்ச்சியாலும் மறுமலர்ச்சி பெற்றது. உயரமான நகரம் கடல் மட்டத்தைவிட 453 அடி உயரத்தில் உளது. அதைவிட 672144 இடத்தில்; செண்பகத்தோப்பு என்னுமிடத்தில் ஓடும் பேயனாற்றின் நீர், ஊற்று மூலம் இவ்வூருக்கு வருகிறது. இதனால் குடிதண்ணீர் வசதி இருந்து வருகிறது. பெரிய குளம். வாழைக்குளம், வேலங்குளம் முதலிய குளங்கள் சூழ அமைந்திருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறது. பித்தளைப் பாத்திரத் தொழிலும், சமக்காளம், வேட்டி, சட்டைத் துணி நெசவும் இந்நகரில் பெரிய அளவில் நடைபெறுகின்றன. பருத்தி ஆராய்ச்சி நிறு வனமும் வேளாண்மைப் பண்ணைகளும் உள்ளன. கூட்டுறவு நூலாலை ஒன்றும் இயங்கிவருகிறது. நகரின் மக்கள் தொகை 55,000. நகராண்மைக் கழகத்தின் வருவாய் பத்து லட்சம் ரூபாய். இருப்பவை: கத்தோலிக்கச் சமயத்தைச் சேர்ந்த பெல்ஜியக் கன்னிமார் நடத்தும் கல்வி நிலையங்கள்; இலங்கை பெந்திகோஸ் கிறித்தவர் செயற்கைக் குகை யில் கட்டியுள்ள புராடஸ்டண்டு தேவாலயம், 3,500 கைத்தறிகள், 10 நெல் அறைக்கும் ஆலைகள், 6 சத்திரங் கள், ஓராயிரம் ஐயங்கார் குடும்பங்கள்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/495
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை