பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

495 கள் செல்வக்குப் பெற்றதாகவும், இன்று புகழ் பெற்ற பெருமாள் கோவிலாக உயர்ந்த கோபுரத்துடன் விளங்குவது சிவன் கோவிலே என்றும் இந்நகர் திரு வருள் நிலையத் திருப்பணிக் கழகத்தாரின் வெளியீடு கூறுகிறது. இராஜபாளையம் இது தமிழ் இம்மாவட்டத்தின் பெரிய நகரம் இராஜபாளையம் நாட்டின் முன்னணி நகர்களுள் ஒன்று. புகழ் மிக்க வரலாறு, செழுமையும் கொழுமையும் நிறைந்த இயற்கைச் சூழல், விரிந்து வரும் தொழில்கள்; நாட்டுப் பற்று ஆகிய செல்வங்களைக் கவனிக்கும்போது; இந்நகருக்கு இணை இந்நகர்தான்! ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கிருந்து 7மைல், சிவகாசி 19, விருதுநகர் 30, மதுரை 54, இரயில் நிலையம் பெரிது. மக்கள் தொகை விரைவில் ஒரு நூறாயிரம் ஆகிவிடக் கூடும். ஊர்ப் பெயர் : பாளையம் என்பது 'கண்டோன்மண்டு', அதாவது படை தங்கி நிலையூன்றும் இடம். 15,16-ஆம் நூற்றாண்டுகளில் நாயக்க மன்னர்களுடைய ஆட்சியில் விஜயநகரப் பேரரசிலிருந்து தெலுங்கு பேசும் போர் வீரர்கள் தமிழ் நாடெங்கும் கலகங்களை அடக்குவதற் காக வந்து, பல இடங்களில் பாளையம் அடித்தனர். பாளையங்கள் அவற்றை உண்டாக்கியவர்கள் பெயரால் வழியினரான அமைந்தன. விஜயநகர அரசர்களின் ஒருவர் ஏற்படுத்தியதால் இங்கு அமைந்த பாளையம் ராஜபாளையம் எனப் பெயர் பெற்றது இது ஒரு கருத்து. பாளையக்காரர்கள் ஆற்றிய அரும்பணிக்குப் பரி சாக, அரசர்கள் அவர்களுக்கு நிலங்கள் வழங்கி ஆங் .