498 கீரைக்கும் மிளகாய் வற்றலுக்கும் இவ்வூர் புகழ்பெற்றது. உளுந்து,பாசிப்பயறு, தட்டைப்பயறு ஆகியவையும் விளைகின்றன. தக்காளிப்பழத்தைப் பானையில் போட்டு வெளியூர்களுக்கு அனுப்புகிறார்கள். மாந்தோப்பு. தென்னந் தோப்பு, வாழைத்தோட்டம் முதலியன ஏராளம். புளியமரங்கள் பலாமரங்களுக்கும் குறைவில்லை. எலுமிச்சைப் பழத்தை ஊறுகாய் போட்டு, புகையிலைப் பொட்டலம் போலச் சிறு வடிவில் வாழைப்பட்டைகளில் கட்டி இங்கிருந்து நாள்தோறும் சென்னைவரை பல இடங் களுக்கு அனுப்புகிறார்கள். பேரிக்காயும் கொவ்வைப் பழமும் ஆவணி புரட்டாசியில் குவிந்து கிடக்கும். சித்திரை வைகாசியில் தெருவெல்லாம் பலாப்பழ மணம் மூக்கைத் துளைக் கும். மாம்பழச் சாதிகள் பல. அவற்றுள் சப்பட்டை அல்லது பங்கனப்பள்ளி சுவையானது. பஞ்ச வர்ணம் என்பது தோல் சுருங்கியதாகவும் பல நாட்களுக் குப் பின்னரும் சாப்பிடக் கூடியதாகவும் இருக்கும், தைப் பற்றிப் பழ ஆராய்ச்சித் துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். பருத்தி-பஞ்சு: கரிசல் மண் பூமியாக இருப்பதால், பருத்தி பயிரிட ஏற்றது. உழைப்பின் செல்வர்களாகிய இப்பகுதி மக்கள் உகண்டா பருத்தியை விளைவிக்கின் றனர். இது வெள்ளையாயும் பட்டுப் போன்று மென்மை யாயும் நீண்டதாயும் இருக்கும். தமிழ் நாட்டின் தலையாய பஞ்சு வணிகக் கேந்திரங்களுள் இராஜபாளைய மும் ஒன்று. நீக்கி, இந்த தொழில்: பருத்தியிலுள்ள கொட்டையை பஞ்சைப் பிரிப்பது இங்கு ஒரு முக்கிய தொழில். வகையில் 25 தொழிற்சாலைகள் உள்ளன. நூல் ஆலை களும் நெசவாலைகளுமாக 15-ம் சாயத் தொழிற் சாலைகள், இரும்புக் கடசல் பட்டறைகள், துத்தநாகத்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/500
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை