503 இராஜபாளையத்தில் உயர்நிலைப்பள்ளியும் தந்தி அலுவ லகமும் இவர்களாலேயே ஏற்பட்டன. சைவத்தையும் தமிழையும் 17-ஆம் நூற்றாண்டு முதல் இவர்கள் போற்றிப் புரந்து வந்திருக்கின்றனர். மூன்றாவது பாளையக்காரரான சின்னையத் தேவர் தமிழ்ப் புலவர்கட்குப் பரிசிலும் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு நிலங்களும் வழங்கியுள்ளார். 1800-இல் குறுநில மன்ன ராக வாழ்ந்தபோது, இராஜபாளையம் சங்கர மூரத்திக் கவிராயர் 'சேற்றூர்ப் பள்ளு' பாடியுள்ளார். சுந்தர தாஸ் தேவர், காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர், தனிச் செய்யுட் சிந்தாமணி ஆசிரியர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர். முகவூர் மு.ரா. அருணாசலக் கவிராயர் ஆகியோர் இவர் களுடைய ஆதரவு பெற்றவர்களில் சிலர் ஆவர். சேற்றூர்க் குறுநில மன்னர்களின் மாளிகையில் முப்பதடி சுற்றளவும் நான்கடி உயரமும் உள்ள சதுர வடிவான கருங்கல் காணத்தக்கது. விக்கிரமச் சோழனுக்குக் கண்பார்வை வழங்கிய திருக்கண்ணீசுவரர் கோவில், சேற்றூரில் இருக்கிறது. இக்கோவிலும் தேவதானம் கோவிலும் சேற்றூர் மன் னர்கள் ஆளுகையில் உள். காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு அருகே ஒரு சேத்தூர் இருக்கிறது. தேவதானம்: இவ்வூர் மதுரை-தென்காசிச் சாலையில் இராஜபாளையத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் சேற் றூர்க்குத் தென்மேற்கே அமைந்திருக்கிறது. இச்சாலை யில் இராமநாதபுர மாவட்டத்தில் இதுவே கடைசி ஊராகும். மக்கள் தொகை 6.000. இ.-32
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/507
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை