508 கொல்லம், கேரளத்தின் தலைநகரமாக இருந்தது. அந்நகரைப் போரில் கொண்ட ஒரு வீரனுக்கு இவ்வூர் மானியமாக விடப்பட்டிருக்கக்கூடும். இளந்திரை கொண்டான்: இவ்வூரின் பெயர் ஈழம் திரை கொண்டான் என்று இருந்திருக்கக்கூடும். ஈழம் என்பது இலங்கையின் மறு பெயர் ஆகும். இங்கே சமணர் பலர் இருந்தனர். இவருள் சிலர் பிராமணராகி,நீரகத்து ஐயனாரை வழிபடுகின்றனர். இவ்வூர்ப் பள்ளர்கள் பலர் 'நீர் ஆறு' (ஐயனார் பெயர்) என்று பெயரிட்டுக் கொள்ளுகின்றனர். புனல்வேலி: பொட்டல்பட்டிக்கு அருகேயுள்ள நெசவுத் தொழிலில் சிற்றூர். சிறந்து விளங்குகின்றனர். . இவ்வூர்ச் சாலியர் கொங்கன்குளம்; இராசபாளையத்திலிருந்து 19 கி.மீ. தொலைவு.வில்லிபுத்தூராரைப் பாரதம் பாடச் செய்த கொங்கன் என்னும் சிற்றரசன் இவ்வூரினன். வற்றாயிருப்பு ஊராட்சி ஒன்றியம் எல்லைகள்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் வட பகுதி யில் இது அமைந்தது. இவ்வொன்றியத்துக்கு வட மேற்கேயும் வட கிழக்கேயும் மதுரை மாவட்டத்துச் சேடபட்டி, கல்லுப்பட்டி ஒன்றியங்களும், கிழக்கே சிவ காசி ஒன்றியமும், தென் கிழக்கேயும் தெற்கேயும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியமும் மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. பரப்பு: 10 சதுரமைல் (300 சதுர கி.மீ.) மக்கள் தொகை: ஒன்றியத்தின் மக்கள் தொகை 83,760 ஆகும். மறவர்களும் நாயடுகளும் இங்கு வாழும் .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/510
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை