512 கள் மட்டுமே இருந்து வருகின்றன. காட்டுமரங்களைக் கொண்டு பார வண்டிகள் வற்றாயிருப்பில் நூற்றுக்கணக் கில் செய்யப்படுகின்றன. இவ்வொன்றியத்தில் இரயில் பாதைகள் கிடை யாது. அண்மையிலுள்ள நிலையம் ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையம், இது வற்றாயிருப்பிலிருந்து 22 கி.மீ. தொலைவு. வற்றாயிருப்பு: (ம.தொ. 14,000) இச்சிறு நகரம் அர்ஜுணா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. ஊர்ப் பெயர் 'வாட்ராப்' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படு கிறது. தமிழில் வத்ராயிருப்பு என எழுதப்பட்டுவரு றது. இது வற்றாயிருப்பு என்பதன் மரூஉ, 'வற்றியிரா இருப்பு' என்பதே தொன்மையான பெயர் என்று சொல்லுவாரும் உண்டு. எவ்வாறாயினும், இவ்வூர் வளம் கொழித்து, இராமநாதபுர மாவட்டத்துக்கு ஒரு வைப்பு நிதியாக இருந்து வருகிறது. . உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாயும் தேசிய பௌதிக் ஆராய்ச்சிக் கூடத் தலைவராயும் இருந்த டாக்டர் கே. எஸ். கிருஷ்ணன் (இ. 1961) இவ்வூரினர். இயற்கை எழில் நிறைந்த சூழலில் இவ்வூர் அமைந் திருப்பது, இராமநாதபுர மாவட்டத்தில் வேறு எந்த ஊருக்கும் இல்லாச் சிறப்பாகும். இவ்வூரில் இருப்பவை - ஊராட்சி மன்ற ஒன்றி யத்து அலுவலகம், ஆவணக்களரி, 1879 முதல் நடை பெற்று வரும் இந்து உயர்நிலைப்பள்ளி, சிவன் கோவில், பெருமாள்கோயில், அநுமார் கோவில், மதுரைத் தையற் காரர்கள். திருவிழா நடத்தும் நல்லதங்காள் கோவில், வேளாண்மை வங்கி, மூன்று முக்கியமான தெருக்களின் குறுக்கெ உள்ள தலையணைத் தெரு'
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/514
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை