516 அடங்கப்பெற்று ஒப்புயர்வற்ற ஈசனார் இருப்பிடமாக அமைந்தது. மகாலிங்கம் கோயிலிலிருந்து மேலும் 3 கி.மீ. தொலைவு சென்றால் சந்தன மகாலிங்கம் என்ற லிங்கம் உள்ள குகையை அடையலாம். சதுரகிரி என்பது சிதறிய கிரி என்பதன் மரூஉ என்பர். தாணிப்பாறையில் அஷ்டலட்சுமி ஆசிரமம் இருக் கிறது. வழுக்குப் பாறையில் அகலமான சாலையும் அத்தியூத்து பசுக்கடை போன்ற இடங்களில் சத்திரங் களும் தேவைப்படுகின்றன. சிறுமலை: கத்தோலிக்கம் முதலில் பரவிய டங் களுள் இது ஒன்று. ஒரு சிறு குன்றின்மீது இவ்வூர் உளது. ஊரின் ஒருபகுதி கிறிஸ்தியான்பேட்டை என்ற பெயரை உடையது. கிறித்துவப் பெரியார் ஒருவர் இங்கு 17-ஆம் நூற்றாண்டில் அடங்கியுள்ளார். ஆண்டுதோறும் மே மாதம் ஒரு திருவிழா நடைபெறுகிறது. சுந்தரபாண்டியம்: வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் என்ற இரு சகோதரர் இருந்தனர் என்றும் முஸ்லிம் அரசனான கில்ஜி என்பார் ஆதரவு பெற்று வீரபாண் டியன் சிற்றரசனாயினான் என்றும் அவனால் விரட்டப் பெற்ற சுந்தரபாண்டியன் ஒதுங்கி வாழ்ந்த இடம் சுந்தரபாண்டியம் என்னும் ஊராக உருவானதாயும் கூறப்படுகிறது. வீரபாண்டியபுரம் என்னும் ஊர் எட்டையபுரத்துக்கும் தூத்துக்குடிக்கும் இடையே இருக் கிறது. இவ்வூரில் வேட்டி நெசவு மிகுதி. பெரியதொரு கண்மாய் தோண்டப்பட்டிருகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/518
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை