பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

517 இவ்வூர்க்கு வடக்கே வைகுந்த மூர்த்தி கோயில் உளது. பார்ப்பனத்தையனார் கோவில்: இக் கோயில் மஹாராஜ புரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கல்லணையாற்றுக் கரையில் உளது. ஒற்றையடிப்பாதையில் இங்குச் செல்வ வேண்டும். 300 அடி (91 மீட்டா) உயரமுள்ள ஆனந்தமடம் என்ற குன்று இருக்கிறது. உச்சியில் இது ஒரே கல்லாக உளது. அக் கல்லின்மீது நின்று பார்த்தால் சுற்று வட்டம் கவினுறு காட்சி தருகிறது- புதுப்பட்டி: வற்றாயிருப்பிலிருந்து வயல்வழி ஒன்றரை கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. மக்கள் தொகை 9,008. நெசவுத் தொழில் இங்கு சிறப்பாக நடைபெறு கிறது. இந்திய விடுதலைப் போரில் இவ்வூரின் பங்கு குறிப்பிடத் தக்கது. ஊரருகே சந்தனப் பெருமாள் கோவில் இருக்கிறது. அடிக்கடி வெள்ளம் வருவதால் இக் கோவில் திருவிழா வற்றாயிருப்பில் நிகழ்கிறது. இங்குள்ள கத்தோலிக்கத் தேவாலயத்தில் பதிவு செய்யப்பெற்றுள்ள கத்தோலிக் கர் 8663 பேர் ஆவர். புதுப்பட்டியிலிருந்து நடந்து மலைமீது 11 கி.மீ சென்றால் (இராஜபாளையம் பகுதியான) அழகர்கோவிலை அடையலாம். டிருக்கக் துலுக்கப்பட்டி: துலுக்க ஆட்சியில் இச்சிற்றூர் ஏற்பட் கூடும். இப்போது இங்கு இம் மதத்தார் ஒருவருமில்லை. வளம் நிறைந்த இவ்வூர் முன்னர்ப் பேரையூர் ஜமீன் கிராமமாக இருந்தது. மஹாராஜபுரம்: வற்றாயிருப்புக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர் 4,222 மக்கள் வாழும் வளமான