பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

519 இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது. இவ்வூரைப் பற்றிச் செப்பேடு ஒன்று உண்டு. அரசர் மூவரை வென்ற ஒருவன் வரலாறு கூறப்படுகிறது.மூவறையன் என்ற சிற்றரசனைச் சூழ்ச்சியாக வென்று வற்றாயிருப்பு ஊரினர் கொன்றதாகப் பிறிதொரு உண்டு. வரலாறும் 9. அருப்புக்கோட்டை வட்டம் வைகைக்கு மேற்கே அமைந்த வட்டங்களுள் இது நடுநாயகமானது. மதுரை மாவட்டத்துத் திருமங்கலம் நெல்லை மாவட்டத்துக் கோவில்பட்டி வட்டங்கள் தன் அருகேயுள்ளன. மக்கள் தொகை மூன்று லட்சம். நாயக்கர் ஆட்சியில் குடியேறிய கம்மவர் நாயுடு. ரெட்டியாரி, தேவாங்கர் ஆகியோர் இவ்வட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். தொன்றுதொட்டு இது மறவர் நாடு; இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் வளம், சாத்தூரின் தொழிற் செழிப்பு, இராமநாதபுரத்தின் வரலாற்றுப் பெருமை, முதுகுளத்தூரின் பிற்பட்ட தன்மை ஆகியவை இங்கு இல்லை. மலையும் காடும் இல்லை. குண்டாறு, கிருதுமால் என்ற சிற்றாறுகளே பாய்கின்றன. புன்செய் வேளாண்மையும் நெசவுமே இங்குள்ள தொழில்கள். - 111 மதுரை - விருதுநகர் இரயில் பாதை இவ்வட்டத் தைத் தொட்டுக்கொண்டு செல்லுகிறது. விருதுநகர்- மானாமதுரை இரயில் பாதை இவ்வட்டத்தை, சமமான இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. தூத்துக்குடிக்கு அகல இரயில் பாதை ஏற்பட்டு இவ்வழியாக அமைந்தால் இவ்வட்டம் வளர்ச்சியடையக்கூடும்.