களைக் $22 கத் பூங்கா நாடு என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுவதற் கேற்ப, இன்றும் வயல்களில் நூற்றுக்கணக்கான மயில் காணுகிறோம். பெருமாள் கோவிலும் தோலிக்கர் ஆலயமும் உள்ளன. இந்நூற்றாண்டின் தொடக்கம் வரை பெரிய அக்கிரகாரம் இருந்தது. பாலவநத்தம்: விருதுநகர்க்கும் அருப்புக்கோட்டைக் நன்செய் கும் இடையே சமதொலைவில் இருக்கிறது. புன்செய் வளங்கள் உடையது. கைலாசந கோவி லும் மசூதியும் தேவாலயமும் இருக்கின்றன, பாண்டித் துரைத் தேவரால் இங்கு நிலவிய ஜமீன் இந்நூற் றாண்டின் தொடக்கத்தில் புகழ் பெற்றிருந்தது. பாளையப்பட்டி: அருப்புக்கோட்டை இரயிலடி அருகே உளது. குளமும் கோவிலும் ஊர்ப் பழமையைப் பறை சாற்றுகின்றன. பாளையப்பட்டிக் குறுநில மன்னர்கள் ராமநாதபுரம் சேதுபதிகளுடன் கொள்வினை கொடுப் பினை உறவு கொண்டிருந்தனர். தாழில்கள்-சீனிக்கிழங்கு, மிளகாய் பயிரிடல், மல்லிகைப் பூத்தோட்டம் போடுதல், நெசவு. வைகாசியில் வேணுகோபால சுவாமி கோவில் திருவிழாவுக்கு மாட்டுத் தாவணி கூடுகிறது. மலைப்பட்டி: பாலவநத்தத்திதிற்கு அருகே ரெட்டி யார்கள் ஒரு குன்றின்மீது பெருமாள் கோவில் கட்டியி ருக்கின்றனர். குருசாமி கோவிலால் புகழ்பெற்ற கூத்திப் பாறை இவ்வூருக்கு அருகு. மந்திஓடை: ஓடையை அடுத்த ஊர். ஓடைமீது கட்டிய பாலத்தை, மந்திரி பனகல் அரசர் திறந்தார். அதனால் மந்தி ஓடை, மந்திரி ஓடை ஆயிற்று!
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/524
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை