523 காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் அருப்புக் கோட்டை வட்டத்தின் வடகோடியில். மதுரை மாவட்ட எல்லையில் இந்த ஒன்றியம் அமைந் துளது. இவ்வொன்றியத்துக் கிழக்கே நரிக்குடி. தென் கிழக்கே திருச்சுழி; தென்மேற்கே அருப்புக்கோட்டை, மேற்கே விருதுநகர், வடமேற்கே கள்ளிக்குடி (மதுரை) வடக்கே திருமங்கலம் (மதுரை) ஒன்றியங்கள் உள. தலை நகரான காரியாப்பட்டி மதுரையிலிருந்து 28கி.மீ. தொலைவு. அருப்புக்கோட்டையிலிருந்து 19 கி.மீ. ஒன்றியத்தின் பரப்பு 171.34 சதுரமைல்.மக்கள் தொகை 55,373. ஊராட்சி மன்றங்கள் 38. குண்டாறு, திருமங்கலம் பகுதியிலிருந்து இவ்வொன் றியத்தின் வழியாக நரிக்குடிப் பகுதிக்குச் செல்லுகிறது. து மழை பெய்தால் மட்டுமே நீர் தங்கி ஓடும் சிற்றாறு எனவே இப்பகுதியில் வளம் குறைவு. வேளாண்மை மிகுதி. 400க்கு மேற்பட்ட பம்ப் செட்டுகள் ஏற்பட்டு, அவற்றின் வழி வேளாண்மை நடைபெறுகிறது. இறைவைக் கிணறுகளும் உள்ளன. கண்மாய்கள் பெரிய அளவின. 12 ஊர்கள் மதுரைச் சாலைக்கு மேற்கேயுள்ள 12 வளமாக உள்ளன. எஞ்சிய 26 ஊர்கள் பின் தங்கிய மழை மிகக் நிலையில் இருக்கின்றன. குறைவு. 1959 முதல் 1962 வரை சேர்ந்தாற்போல் வானம் பொய்த்தது. காடுகள், மலைகள் இங்கு இல்லை. இரயில் போக்குவரத்தும் இல்லை. மிக அண்மையிலுள்ள இரயில் நிலையம்,ஒன்றியத்து எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலை விலுள்ள கள்ளிக்குடி ஆகும். முக்கிய பயிர்- நெல்.பிற விளை பொருள்கள் - கேப்பை, கடலை, மேற்குப் பகுதியில் பருத்தி,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/525
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை