524 சில ஊர்களில் குட்டநோய் பரவியிருக்கிறது. ம் துலுக்கன்குளம், தாமரைக்குளம் அருகே சுண்ணா புக்கல் ஓரளவு உண்டு. செவல்பட்டி, சின்னக் கல்லுப் மந்திரி ஓடைப் பட்டி, பகுதிகளிலிருந்து சென்னை மாநகர் வரை பல நகரங்களுக்கு மல்லிகைப் பூ விற்பனை யாகிறது. காரியாபட்டி: மதுரை -- அருப்புக் கோட்டைச் சாலை யில் உள்ள ஊர். ம.தொ.4,293. ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆவணக்களரி. தச்சுப் பயிற்சி நிலையம், கத்தோலிக்கர் தேவாலயம். மசூதி ஆகியவை உள்ள ஊர். ஒன்றியத்தில் இங்கு மட்டுமே போலீஸ் நிலையம் உண்டு. இங்கிருந்து திருச்சுழி குறுக்குச் சாலை வழி 19 கி.மீ. அழகிய நல்லூர்: (3,743) ஒன்றியத்தின் மேற்குக் கோடியில் உள்ள ஊர். இவ்வூரின் பழையபெயர் குட்ட லோட்டி. மிளகாய் பருத்தி கடலை வேளாண்மையாலும் மயில்களின் கூட்டத்தாலும் புகழ்பெற்றது. அல்லாலப்பேரி: ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் முடக்கன் குளத்திற்கு அருகேயுள்ள சிற்றூர். அல்லா வின் பேரிகை கேட்டதால் ஊர்ப்பெயர் இவ்வாறா யிற்று. இவ்வூரைச் சேர்ந்த ஒரு சிற்றூரின் பெயர் வெற்றிலை முருகன்பட்டி என்பதாகும். . ஆவியூர்: கரியாபட்டியிலிருந்து வடக்கே 8 கி.மீ. தொலைவிலுள்ள ஊர். புராணத் தொடர்புடையது. ஜ டு கில்பட்டி: கல்குறிச்சியிலிருந்து ஒரு கி.மீ தொலைவு.இப்பகுதியில் பாறை, கல் உடைக்கின்றனர், விசயநகரப் பகுதியிலிருந்து குடியேறிய ரெட்டியார்கள் வாழ்கின்றனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/526
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை