பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

525 கல்குறிச்சி: நெசவாளர் மிகுந்த ஊர். இங்கிருந்து மதுரை 37 கி.மீ ; மல்லாங்கிணறு வழி விருதுநகர் 16கி.மீ. தே. கடம்பன்குளம்: இது ஆவியூருக்கு அருகு. இதைச் சேர்ந்த புல்லூரில் அரசாங்க விதைப்பண்ணை நிறுவப் பட்டிருக்கிறது. தோப்பூர்: ஜமீன் பகுதியாக இருந்தது. தோப்புக்கள் அழிந்துவிட்டன. புளிய மரங்கள் வைக்கப்பட்டிருக் கின்றன. 6 வரலொட்டி: விருதுநகரிலிருந்து 6 கி.மீ. இவ்வூர் வழியே மங்கம்மாள் அமைத்தசாலை பாலவனத்தத்துக்கு உண்டு இவ்வூர்க் கண்மாய்க்குள் செங்கற் கட்டிடங் களின் சின்னங்கள் காணப்படுகின்றன. சக்கிலியர் குடியிருப்புக்கு அருகே புதைந்த சிவன் கோயிலின் அடையாளங்கள் தெரிகின்றன. 15 அடி நீளம் 12 அடி அகலம் அளவில் 5 கிணறுகள் உள்ளன. இவற்றுக்குப் பாண்டியன் கிணறு என்று பெயர் வழங்கிவருகிறது. கிணற்றுச் சுற்று மதிலில் கல்வெட்டுக்கள் பொறிக்கப் பெற்றுள். மல்லாங்கிணறு: (5,956) வளமான ஊர். வரலொட் டிக்கு அருகே சூரம்பட்டியில் எலும்புமுறிவு சரிக்கட்டப் படுகிறது. நெடுங்காலமாக மல்லாங் கிணற்றில் நாடகக்கலை ஆதரிக்கப் பெற்று வந்திருக்கிறது. வயிரவ நாங்கூர்: அருப்புக்கோட்டை - மதுரைச் சாலையின் கிழக்கேயுள்ள சிற்றூர். இங்கு ஒரு மசூதி இருக்கிறது. இவ்வூரின் உட்கிராமங்கள் - ஆண்மை பெருக்கி, விட்டிலே ரேந்தல், திருமேனியேந்தல். பாம்பாட்டி: காரியாபட்டிக்கு மேற்கேயுள்ள சிற்றூர். இதன் உட்கிராமம் ஒன்று புலவன் குண்டு என்ற பெய ருடையது.