528 சத்திரம் புளியங்குளம்: காரியாபட்டியிலிருந்து 8 கி. மீ. திருச்சுழியல், திருப்பூவணம் என்னும் பாடல் பெற்ற தலங்களுக்கிடையே ராணிமங்கம்மாள் சாலையமைத்துச் சத்திரமும் கட்டியிருந்தார். முடுக்கன்குளம்: காரியாபட்டிக்கு 13 கி. மீ. கிழக்கே சீரழிந்தநிலையில் உள்ள இவ்வூர்ச் சிவன்கோயில் 15-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்பர். பாப்பனம்: காரியாப்பட்டிக்கு வடகிழக்கே 5 கி.மீ. பழமையான ஊர். அழிந்துவிட்ட இவ்வூர்க் கோயில் அமைட்பில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறு வடிவம் ஆகும். சிற்றூர்கள் - பல்லவரேந்தல், சக்கரக் கோட்டை. 1 மாந்தோப்பு: மேற்கு எல்லையிலுள்ள சிற்றூர். மான் களுக்கு அடைக்கலமான ஊர். மான் தரப்பு என்பதன் மரூஉ. புதுப்பட்டி: இவ்வூரின் முழுப்பெயர் பெருஞ்சாளி புதுப்பட்டி. ம.தொ.8500. 1962 வரை திருச்சுழி ஒன்றியத்தில் இருந்தது. மந்திரி ஓடை ஆறும் குண்டாறும் இங்கு சேருகின்றன. அதனால் வளமடைந் துள்ள ஊர். இவ்வாறுகள் சேருமிடத்தில் பாலம் கட்டி திருச்சுழிக்கும் மதுரைக்கும் நேர் சாலை போடப்பட்டி ருக்கிறது. இங்கிருந்து திருச்சுழி 10 கி.மீ. குருநாதன் கோயில் என்ற பாழடைந்த கோயி வருகே 1955-இல் முதுமக்கள் தாழி அகப்பட்டது, 17ஆ-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வரதராசப் பெருமாள் கோயி லும் இவ்வூரில் இருக்கிறது. சனிக்கிழமைகளில் மட்டும் பூசை நடைபெறுகிறது. கிருஷ்ணாபுரம்: கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் ஏற்பட்டது. கல்குறிச்சியிலிருந்து 11கி.மீ,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/528
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை