31 இம்மாவட்டத்தில் எல்லா சமூகத்தாரும் வாழ்கின் றனர். எனினும் பல காரணங்களால் ஆங்காங்கே குறிப் பிட்ட சில சமூகத்தினர் செல்வாக்குப் பெற்றுள்ளனர். இராமநாதபுரம். முதுகுளத்தூர், சிவகங்கை வட்டங்களில் மறவர்கள் வாழ்கின்றனர். விருதுநகர் - சிவகாசிப் - திருவாடானை, செல்வாக்குடன் . பகுதிகளில் நாடார்கள் பெருஞ் சிறப்புடன் வாழ்கின்றனர். எல்லா வட்டங்களிலும் சில சிற்றூர்களிலும் இவர்கள் ஏற்றம் பெற்றிருக்கின்றனர். எல்லா நகரங்களிலும் நாடார் பேட்டைகள் உள்ளன. இராஜபாளையம் பகுதியில் ராஜாக்கள் வாணிபத்திலும், தொழில்களிலும் முக்கிய மாக விளங்குகின்றனர். ஸ்ரீ வில்லிபுத்தூரிலும், சாத்தூர் வட்டத்தின் சிற்றூர்களிலும் நாயக்கமார் குறிப்பிடத் தக்கவர்கள். அருப்புக் கோட்டையில் ே தவாங்கர் சிறப்பான சமூகமாக உள்ளனர். வற்றாயிருப்பு, சிவகங்கைப் பகுதிகளில் பிராமணர்கள் ஓரளவு உள்ளனர். இராமநாதபுரம். முதுகுளத்தூர், பரமக்குடி வட்டங்களில் முஸ்லீம்கள் செல்வச் செழிப்புடன் திகழ் கின்றனர். அருப்புக் கோடை வட்டத்தின் சில பகுதி களில் ரெட்டியார் சமூகத்தினர் தொகுப்பாக உள்ளனர். பரமக்குடியருகே நெசவாளராகிய சௌராஷ்டிரர் குறிப்பிடத்தக்க அளவு இருக்கின்றனர் திருப்பத்தூர் வட்டமும் தேவகோட்டை நகரும் சிவகங்கை வட்டத் தின் சில பகுதிகளும் செட்டிநாடு' என்ற பெயர் பெற்று நாட்டுக் கோட்டை நகரத்தார்களின் தாயகமாக உள்ளன. . வளமின்மையால், இம்மாவட்டத்திலிருந்து முக் குலத்தோர் அறுவடைக் காலத்தில் தஞ்சை மாவட்டத் திற்குப் பெருவாரியாகச் சென்று அறுவடை வேலைகளில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை