பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

535 மாணிக்கங்களை மீண்டும் கண்டுகொண்ட இடம் என்று ஊர்ப் பெயருக்கு விளக்கம் கூறுவர். வீரசோழம்: இவ்வூர், சோழர் தொடர்பை நினைவூட்டு கிறது. நரிக்குடியிலிருந்து 5கி.மீ. மக்கள் தொகை 5,000. சுற்றியுள்ள காடுகளிலிருந்து மயில்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து உலவுகின்றன. இசுலாமிய உறவின் முறைச் சங்கம் நடத்தும் பள்ளிவாசலில் இவற்றுக்குக் கேப்பை, கம்பு, நெல், முதலிய உணவுகளை வழங்குகிறார்கள். இதற்கு ஒரு பணியாளும் நியமிக்கப் பட்டுள்ளார். அவருடைய சம்பளமும் மயில்களுக்குப் போடப்படும் உணவுப் பொருள்களின் விலையும் பர்மா வில் வாழும் இவ்வூராரால் ஏற்றுக்கொள்ளப்படுகின் றன. அரசினரும் ஆண்டுதோறும் சிறு கொடுக்கின்றனர். மானியம் கோரிக்கைகளின் பேரில் இரண்டு மயில்களுக்குப் 'பிடி கூலி' யாக 10 ரூபாயும் அனுப்பும் செலவும் பெற்றுக் கொண்டு, மயில்களைப் பிடித்து அனுப்பு கிறார்கள். கிண்டியிலுள்ள தமிழக ஆளுநர் மாளிகை, விழுப் புரம்,கரூர் நகராண்மைக் கழகத்தார்கள். எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில், சென்னையிலுள்ள பிரிட் டிஷ் கவுன்ஸில் முதலிய பல்வேறு நிறுவனங்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும், செல்வர்களுக்கும் அனுப்பியுள்ளனர். மயில்கள் மயில்கள் தேவையென நாள் தோறும் கடிதங்கள் வந்தவண்ணமிருக்கின்றன. மயில்கள் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் முட்டையிடுகின்றன. ஒவ்வொரு தடவையும் 9 முதல் 11 முட்டைகள் வரை இடுகின்றன. மூன்று மாதம்