பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

541 அத்தினத்திற் கிடைக்காத அவலமிகும் இழிநிலையின் அவமா னத்தால் இத்தினத்திற் பொலியுதமிழ்ச் சங்கம்வைத்துத் துயர்துடைத்துத் திகழ்ந்தான் எங்கள் தென்பாண்டித் துரைத்தேவன்! சேதுபதிப் பரம்பரையின் செம்மல் அன்னோன் பொன்னாண்ட திருநாமம் பூந்தமிழின் உலகமெலாம் போற்றக் காண்மின்! தென்பாண்டித் திருநாட்டின் திலகமெனச் சிவகங்கைச் சீமை யின்கண் மண்ணாண்ட விறல்மருது பாண்டியர்கள் மாவீரம் வழுத்தக் கேண்மின்! மற்போரும் விற்போரும் மாதமிழில் வல்லறிஞர் வாதப் போரும் பொற்பாரும் மத்தகங்கள் பொருப்பெனவே எதிடர்ந்து பொருதும் போரும் தெற்காரும் பாஞ்சாலத் திறல்மறவன் கட்டபொம்மன் செருத்த போரில் நிற்பாரோ வெள்ளையரிங் கென்றவர்க்குத் தோள் கொடுத்து நிமிர்ந்துநின்று அந்நியரின் வெந்தலைகள் அடுக்கடுக்காய்ச் சிதறிவிழ அடுத்த போரும் துன்னலரின் செங்குருதி தோயவுடன் மாமலையாய்ச் சுதந்தி ரத்துச் சின்னமெனத் திகழநெடுஞ் சிவகங்கைச் சீமையெலாம் செம்மண் மேடாய் இன்னமுநாம் காணுமொரு எழில்நிறைந்த காட்சியுற எடுத்த மேடும்