பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 இவ்வாறு யாம்பெற்ற இடையற்ற போர்கள்பல இணையற் றோங்க அவ்வாறப் புகழ்பரவ அருந்தமிழில் பாடல்பல அடுக்கடுக் காய்ச் சவ்வாதுப் புலவரொடு சார்ந்ததமிழ்க் கவிஞர்பலர் தழைக்கத் தந்தார்! எவ்வாறின் றதையிசைப்பேன் என்றெண்ணி ஏங்கிடுதே ஏழை நெஞ்சம்! (வேறு) கலைசொரிந்து நிற்குமுயர் காளைலிங்கர் கோவில்! நலம்புரிந்து புகழ்மணக்கும் நாகலிங்கர் கோவில்! குலக்குமரன் தமிழ்க்குன்றக் குடியமர்ந்த கோவில்! நிலைத்தபெரும் புகழனைத்தும் நிகழ்த்திடயார் (வல்லார். (வேறு) காடெல்லாம் சுற்றிவந்த கவிக்கம்பன் செந்தமிழ்த்தாய் நாடெல்லாம் போற்றுமுயர் நாட்டரசன் கோட்டையிலே ஏடெல்லாம் தமிழ்மணக்க எழிற்கோவில் கொண்டருளும் ஈடில்லாப் புகழ்மணக்கும் எங்களது மாவட்டம்! (வேறு) புவியோங்கு செந்தமிழின் புவனேந்தி ரன்கதையைச் சுவையோங்கச் சொன்னவனஞ் சொற்சரவ ணப்பெருமாள்!