$6 ஏரி வீராணம் ஏரி, ஆழமாக இருப்பதால் 40,000 ஏக்கர் நிலத்திற்குப் பாய்கிறது. இராஜசிங்கமங்கலம் 4,900 ஏக்கருக்குத்தான் உதவுகிறது. ஒவ்வொன்றும் 5,000 ஏக்கருக்குப் பாய்கிற எட்டுப் பெரிய ஏரிகள் -வளவனூர் ஏரி, பெருமாள் ஏரி முதலி யன தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளன. சுற்றளவில் குறைவாக இருப்பதால் அவற்றைப் பெரிய நீர் நிலைகளாக அரசினர் கணக்கில் குறிப்பதில்லை. அவை புகழ் பெற்ற இராஜசிங்கமங்கலம் ஏரியை ஆழப் படுத்துவதும் வைகை நீர் இந்த ஏரிக்குத் தங்குதடை யின்றிப் பாய வழிவகுப்பதும் அரசினர் கடமை. பாசன வசதிகள் வைகை ஆற்றின் நீரால் தொன்றுதொட்டு இம் மாவட்டம் பயனடைந்து வந்திருக்கிறது. மதுரைக் கும் மானாமதுரைக்கும் இடையே யுள்ள பகுதி வெற்றிலைக் கொடிக்கால்களாலும் தென்னந் தோப்புக் களாலும் வளம் பெற்று, ஒரு காலத்திலும் பஞ்சம் அறி யாப் பகுதியாக இருந்துவருகிறது. வைகையின் குறுக்கே பேரணை கட்டப் பெற்ற பிறகு மதுரை மேலூர் வட்டங்களுக்கு வைகை நீர் 1920 அளவில் விடப்பட்டது. அதன் பிறகு இராமநாதபுர மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு வழக்கமாக வந்த வைகை நீர் வாராமல் தடைப்படுகிறது. ஆடி, ஆவணி யில் தண்ணீர் வருவதில்லை.இதனால் ஆடிப்பட்டத் திலேயே உழவு வேலைகளை ஆரம்பிக்க இயலுவதில்லை. திருமங்கலம் வட்டத்திற்கு நீர் வழங்க, ஆண்டிப் பட்டியில் பெரியதொரு அணை கட்டியபோதும், இராம நாதபுர மாவட்டத்தின் பாசன வசதி பாதிக்கப்பட்டது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை