பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ரகப் பஞ்சு உற்பத்தி செய்ய இந்திய அரசு 1945-இல் முடிவு செய்தது. நிலை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தட்பவெப்ப நீண்ட இழையும், மென்மையான திண்மையும். கூடு தலாக நூற்கும் திறமையும் கொண்ட பஞ்சு உற்பத்தி செய்ய ஏற்றதாக இருக்கிறது. இவ்வட்டத்து பெரிய குளம் பகுதியிலும் இனாம் நாச்சியார் கோவில் பகுதி யிலும் ஆராய்ச்சி நிலையங்கள் ஏற்பட்டன. இவற்றில் உற்பத்தியான M. C. U. 1 என்ற உகண்டாப் பருத்தி விதை விவசாயிகளுக்கு வழங்கப் பெற்றது. இதை ராஜ பாளையம் பருத்தி என்று பொதுமக்கள் சொல்லுகிறார் கள். ஐந்து மாதங்களில் மகசூல் கிடைக்கிறது. 4 முதல் 8 பொதி வரை பருத்தி விளைகிறது. ஒரு பொதிக்கு (கம்போடியா பருத்தியைவிட) 25 ரூபாய் கூடுதலாக விலை கிடைக்கிறது. MC U-1 மேலும் ஆராயப்பட்டு M C U-2 என்ற விதை கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இப் புதிய ரகம் 11/16" இழை நீளமும் 44-ஆம் நம்பர் வரை நூற்கும் தகுதியும் பெற்றிருக்கிறது. 13/16" இழை நீளமும் 50-ஆம் நம்பர் நூல் நூற்கும் தகுதியும் உள்ள பருத்தி ரகங்களும் உற்பத்தி செய்யப் பெற்றுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் சாத்தூர் வட்டங்களி லும் அருப்புக் கோட்டை வட்டத்தின் ஒரு பகுதியிலும் பருத்தி சாகுபடியாளர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். குறிப்பாக, தெலுங்கை, வீட்டு மொழியாக உள்ள சமூகத்தினர் பருத்திச் சாகுபடியிலும், நாடார்கள் பருத்தி விற்பனையிலும் சிறந்து விளங்குகின்றனர். சாத்தூர், இராஜபாளையம், விருதுநகர் ஆகிய நகரங்களில் பருத்தி அறைக்கும் ஆலைகள் நெடுங்கால