62 சேர்த்து விதவிதமான ஜெல்லி உணவுகளைச் செய்ய லாம். மீன்: கடலிலிருந்து கிடைக்கும் மற்றொரு முக்கிய உணவுப் பொருள் மீன். இராமநாதபுர மாவட்டத்து மீன்கள் இந்தியாவெங்கும் புகழ் பெற்றவை. 'போட் மெயிலில்' செல்லும் முக்கியப் பொருள் இதுவே! மீன், ஏற்றுமதிப் பொருள் என்ற சிறப்பும் உடையதாயிருப்ப தால், பாண்டிய மன்னர்கள் மீனைத் தங்கள் விருதாகக் கொண்டனர்; மீன் உருவத்தைத் தங்கள் கோவில்களில் பொறித்தனர். திராவிட நாகரிகம் எக்காலத்தும் மீனைச் சிறப்பாகக் கருதி வந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் மீன் பிடிக்கப்படும் இடங்களை யும் இங்கே கிடைக்கும் மீன்களையும் பற்றிக் கூற வேண்டும். இராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம். பாம்பன், கீழக்கரை, பெரியபட்டினம் ஆகிய இடங் களில் மீன் பிடிப்பவர் ஏராளமாக உள்ளனர். அவர் கள் வீச்சுவலை, படிவலைகளை வீசி மீன் பிடிக்கிறார்கள். கடலூரிலும் சென்னையிலும்போல, கட்டுமரங்களில் சென்று மீன் பிடிக்கும் பழக்கம் இம்மாவட்டத்தில் இல்லை. மீன் பிடிக்கப் படகுகளில் செல்லுவது, படகு நிற்கும் இடத்திலிருந்து வலையை வீசுவதற்கே. நூற்றுக்கணக்கான மீன் வகைகள் இம்மாவட்டத் தில் பிடிக்கப்படுகின்றன. அவை குறித்து, சுவையான நூல் எழுதலாம். ஐந்தாறு வகைகளைமட்டும் கூறுவோம். வாவலை' என்பது ஒரு வகை மீன். இட்டிலி போன்ற உருவமும் மென்மையும் உடையது. ஆவலைப் போக்க வாவலைச் சாப்பிடு என்பது பழமொழி.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/64
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை