பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 'உள்ளான்' என்பது மற்றொரு மீன் இனம். அதன் சுவை கருதி, உள்ளதை எல்லாம் விற்றாவது உள்ளான் வாங்கிச் சாப்பிடு என்ற சொல் வழக்கு உண்டு. வெள்ளி வயிறு' எனப்படும் எலும்பு நிறைந்த மீன் வகையும் இம்மாவட்டத்தில் பிடிக்கப்படுகிறது. இதில் கொழுப்புச் சத்து 21. தான். இது சமைப்பதற்கு ஏற்றது. குட்டி போட்டுப் பால் கொடுக்கும் 'மம்மூலியா இனத்தைச் சேர்ந்த ஆவுகரியா மீன்கள் இம்மாவட் டத்தில் குருசடை தீவில் நெடுங்காலமாகப் பிடிக்கப்பட் டுள்ளன. இவைபற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது. பாம்பன் கடலில் 7 அடி நீளமும் 2 அடி அகலமும் உள்ள கடற்கன்னிகள் அகப்படுகின்றன. இவை 60 ஆண்டுவரை வாழும். இவை முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்காமல், குட்டி போட்டுப் பால் கொடுக்கும். கடற் கன்னிகளைக் கடவுளராகக் கருதுவதால், தமிழ் நாட்டு மீனவர் இவற்றைச் சாப்பிடுவதில்லை. கடற் கன்னியின் தோல் பணப்பை (மணி பர்ஸ்) செய்ய உதவு கிறது. தனுஷ்கோடியருகே கூட இராட்சசச் சுராமீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவை 16 அடி நீளம் இருக்கும். ஒரு மீனின் விலை ரூ 500. வலையைக் கரைக்கு இழுத்துவர இயலாமல், மீனவர் திணறும்போது, பொது மக்களும் கைகொடுத்து உதவுவர். மீன் ஆராய்ச்சி உள்நாட்டில் பிடிபடும் மீன்களைப்பற்றி ஆராய கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பரக்பூரிலும், ஆழ்கடல் மீன்களைப்பற்றி ஆராயப் பம்பாயிலும் இந்திய அரசு ஆராய்ச்சி நிலையங்களை நிறுவியுள்ளது.