கடலோரத்தில் பிடிக்கப்பாடும் மீன்களைப்பற்றி ஆராய, கொச்சியிலும் கோவாவிலும் மண்டபத்திலும் ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. இவற்றுள் காலத்தா லும் ஆராய்ச்சியாலும் முக்கியமானது மண்டபத்தி லுள்ள மத்திய கடலோர மீனின ஆராய்ச்சி நிலையம். (Central Marine Fisheries Research Institute, Manda pam Camp.) சுருக்கமாக இதை CMFRI என்று கூறுவர். இந்த நிலையம் 1947-இல் சென்னை மாநகரில், சென்னைப் பல்கலைக்கழகத்து உயிரின் ஆராய்ச்சிப் பகுதியில் தொடங்கப் பெற்றது. பிறகு, மண்டபத்தில் கடற்படை மருத்துவ நிலையத்தில் இருந்து வந்தது. பல லட்சம் ரூபாய்ச்செலவில் இந்த நிலையத்திற்கெனச் சிறந்த கட்டிடங்கள் கட்டப் பெற்றுள்ளன. இந்தியா வெங்குமிருந்து ஏராளமான அறிஞர்கள் இங்கு ஆராய்ச்சி செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மலையாளிகளாக உள்ளனர். அதனால் இந்த நிலையத்தை Central Malayalee Fisheries Research Institute கேலியாகக் குறிப்பிடுவது உண்டு. இந்த நிலையத்தையே கொச்சிக்கு மாற்றவும் அவ்வப்போது முயற்சிகள் நடந்த வண்ணமாக உள்ளன. இந்நிலையத்தை மதுரைப்பல்கலைக்கழகத்தார் ஏற்று. உயிரின ஆராய்ச்சித் துறையின்கீழ் நடத்தி இந்தியப் பல்கலைக்கழகங்களின் மானியமும் பெறலாமென்று இந்நூலாசிரியர் பலமுறை மதுரைப் பல்கலைக்கழகத்துப் பேரவையில் எடுத்துரைத்துள்ளார். கேட்பார் ஒருவரும் இல்லை!1970-இல் இந்த நிலையத்தில் பல முக்கிய பகுதி கள் கொச்சிக்கு மாற்றப்பெற்றுவிட்டன. இதைத் தடுக்க தமிழக அரசு தக்க முயற்சி செய்யவில்லை. மண்டபம் நிலையத்துக்குட்பட்ட சிறு ஆராய்ச்சி நிலையங்கள் கள்ளிக்கோட்டை, கார்வார், பம்பாய்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை