பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பத்தூரிலுள்ள அரசாங்க விற்பனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கே தரம் பிரித்து விற்கப்படுகிறது. இக்காடுகளினூடே, 800 அடி (250 மீட்டர்) உயர முள்ள மலைப் பகுதியில், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அழகர்கோவில் இருக்கிறது. வாரத் தில் இரு நாட்கள் வழிபாடு நடப்பதும் வற்றாத சிறு தீர்த்தம் இருப்பதும் இதன் சிறப்புக்கள். ஜீப்பில், கோவில்வாயில்வரை செல்லலாம். இம்மலை உச்சியில் தவளை போன்ற உருவில் ஒரு பெரிய கல் இருக்கிறது. இது ஓர் அசுரனின் உருவம் என்றும், இந்த அசுரன் மரம் செடி கொடிகளை அழித் துக் காட்டுவளத்தைப் பாழ்படுத்தி வந்தான் என்றும், மதுரையிலிருந்து அழகர் இக்காட்டுக்கு வந்து தம் காலால் அசுரனை மிதித்தார் என்றும், இந்தக் காடு நாளும் வளர்ந்துவர அழகர் வழி வகுத்தார் என்றும், இதனாலேயே இங்கு அமைந்தது அழகர்கோவில் என்றும் கர்ணபரம்பரைக் கதை வழங்கி வருகிறது. . இம்மலையில் 4,000 அடி உயரத்தில் முதலியார் ஊற்று என்னுமிடத்தில் காட்டிலாகாவினர் ஒரு விடுதி கட்டியுள்ளனர். கால் நடை அழகர்கே விலிலிருந்து யாகச் செங்குத்தான மலைமீது மூன்று கி.மீ. தூரம் ஏறி இந்த இடத்தை அடையலாம். இந்த விடுதியில் பொது மக்களும் தங்கலாம். விடுதியிலிருந்து 3 கி.மீ. தொலை மான், காட் வில் வரையாடு, கடுவாய், சிறுத்தை, டெருமை, யானை ஆகியவை வாழ்கின்றன. மலைச் சரிவு, பள்ளத்தாக்கு ஆகியவற்றின் எழிலைக் காணவும், நடை பாதையாக 11 கி.மீ. சென்று கேரள எல்லையை அடையவும் இந்த விடுதியைப் பயன்படுத் தலாம்.