73 முந்தியோ' என்ற பழஞ் சொற்றொடரிலிருந்து திரு வுத்தரகோச மங்கையின் பழமை தெரிகிறது. இது நடராசர் நடனமாடிய இரத்தின சபையையுடைய தலம்; ஆதி சிதம்பரம் எனப்படுவது. இத்தலம் அருண கிரிநாதர் திருப்புகழும் உடையது. 64 திருவிளையாடல் களில் ஒன்றாகிய 'வலைவீசிய லீலை' நடந்த, பரதவர் மிகுந்த கடற்கரைப் பகுதி உத்தரகோச மங்கைக்கு அருகே உள்ளது. தேவார வைப்புத் தலமாகிய ஜயபுரி என்னும் வெற்றியூரும் திருட்புகழ் பெற்ற குன்றக்குடியும் முறையே நாட்டரசன்கோட்டைக்கும் காரைக்குடிக்கும் அருகேயுள்ளன. பிள்ளையார் பட்டியிலும் குன்றக்குடியிலும் குகைக் கோவில்கள் காணப்படுகின்றன. இவை பல்லவர் காலத் தியன.
குறிப்பிடத்தக்க பிற கோவில்கள் கோவில்கள் கோவிலூர், இளையாத்தக்குடி, நேமம், வன்னியர் சூரக்குடி, நகர சூரக்குடி, சிவகாசி ஆகிய ஊர்களில் உள்ளன. இராம நாதபுரத்தில் தாயுமானவர் சமாதிக் கோவில் இருக் கிறது. அம்மன் கோவில்களுள் சிறப்பாகச் சொல்லத் தக்கவை நாட்டரசன் கோட்டை கண்ணகி (கண்ணாத் தாள்) கோவில், காரைக்குடி கொப்புடைய அம்மன் கோவில், விருதுநகர் மாரியம்மன் கோவில், சாத்தூர்ப் கோவில். பகுதியிலுள்ள இருக்கன்குடி மாரியமமன் இராமநாதபுரத்தில் இராஜராஜேசுவரி கோவில். இம்மாவட்டத்திலுள்ள கோவில்கள் அரசாங்கக் கோவில்கள், தனிப்பட்டவர் கோவில்கள், இராமநாத புரம் அரசர் ஆட்சியிலுள்ள கோவில்கள், இ -5 சிவகங்கை