பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அரசர் ஆட்சியிலுள்ள கோவில்கள், நகரத்தார் கோவில் கள் எனப் பலவகைப்படும். நகரத்தார் பிற மாவட் டங்களிலும் கடல் கடந்த நாடுகளிலும் கோவில் கட்டியும் திருவிழா நடத்தியும் சைவ சமயத்துக்குச் செய்துள்ள தொண்டு இணையற்றது. தத்புருஷ தேசிகர் பாலகவி வயிநாகரம் இராம நாதன் செட்டியார் அவர்கள் சமயத் தத்துவங்களைப் பற்றிச் சீரிய கட்டுரைகள் எழுதியும் அரிய சொற் பொழிவுகளும் பாடவகுப்புக்களும் நடத்தியும் உப தேசம் செய்து வைத்தும் தென்கிழக்காசிய நாடுகளி லெல்லாம் சைவ சமயத்தைப் பரப்பி வருகின்றார்கள். வைணவம் : வைணவ தலங்களுக்கும் இங்கே குறைவில்லை. இராமேசுவரம், திருப்புல்லணை (இராமநாதபுரம் அருகே) அரியக்குடி (காரைக்குடியருகே), திருக்கோட்டியூர் (திருப்பத்தூர் அருகே), ஸ்ரீவில்லிபுத்தூர், திருத்தங்கல் (சிவகாசி அருகே) ஆகிய தலங்கள் தொன்மைப் புக ழுடையன. இவைபற்றி இந்நூலின் பிற்பகுதியில் விரி வாகக் கூறுவோம். முஸ்லிம் ஆட்சியில் ஸ்ரீரங்கத்திலிருந்து வெளி யேறிய வைணவர்கள் இம்மாவட்டத்தில் காளையார் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். காளையார் கோவில் அவர்களுடைய அரசரின் புகலிடமாக விளங்கிற்று. இரண்டாம் குமார கம்பணன் என்ற அரசனின் தளபதி யான கோபண்ணா, ஸ்ரீரங்கத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்டு அங்கு மீண்டும் ஸ்ரீரெங்கநாதரைப் பிரதிஷ்டை செய்த பிறகு அவர்கள் காளையார் கோவிலிலிருந்து ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினர்.