79 திருவிழாக்கள் சித்திரை முதல்நாள் (புத்தாண்டுப் பிறப்பு) காரைக்குடியில் பெருவிழாவாகக் கொண்டாடப் படு கிறது. வைகாசி விசாகம் குன்றக்குடியிலும் வைகாசி முழு நிலா அரியக்குடி கோவிலும் வைகாசி விசாகத்தில் கண்ணுடைய நாயகி திருவிழா நாட்டரசன் கோட்டை யிலும், ஆனி மாதத்தில் இராமலிங்கம் பிரதிட்டை இராமேசுவரத்திலும், ஆடிப்பூரம் ஸ்ரீ வில்லிபுத்தூரி லும், ஆடி அமாவாசை முன்பு தனுஷ்கோடியிலும் இப்போது இராமேசுவரத்திலும் குறிப்பிடத்தக்கன. ஆவணியில் விநாயக சதுர்த்தி பிள்ளையார் பட்டியிலும் புரட்டாசியில் நவராத்திரி இராமநாதபுரத்திலும் ஐப்பசியில் கந்தர்சஷ்டி தேவகோட்டையிலும் திருக் கோட்டியூரில் வைகுண்ட ஏகாதசியும் குறிப்பிடத் தக்கன. மார்கழியில் திருப்பாவை விழா ஸ்ரீவில்லிபுத்தூரி லும் திருவாதிரை விழா திருவுத்தரகோசமங்கையிலும், தையில் திருக்கோட்டியூரில் தெப்பமும், மாசி சிவன் ராத்திரி இராமேசுவரத்திலும். பங்குனியில் உத்தரம் குன்றக்குடியிலும்; மாரியம்மன் கோயில் உற்சவம் விருது நகரிலும் பெருஞ்சிறப்புடன் நிகழ்கின்றன. சேக்கிழார் திருநாள் தேவகோட்டை சேக்கிழார் கழகத்தாரால் ஆண்டுதோறும் இனிது நடாத்தப் படுகிறது. களுக்குரிய மசூதிகளிலும் தேவாலயங்களிலும் அவ்வச் சமயங் விழாக்கள் நிகழ்கின்றன. ஓரியூர் கத் இவரைப்பற்றி, தஞ்சாவூர் மாவட்டம் என்ற என் நூலில் (முதல் பதிப்பு பக்கம் 52-இல்) காண்சு.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை