பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தோலிக்கத் தேவாலயத்தில் நிகழும் திருவிழாவுக்கு ஆண்டு தோறும் பிற மாவட்டங்களிலிருந்தும் திரளான மக்கள் வருகின்றனர். சருகணி மாதாகோவிலும் நரிக்குடி மசூதியும் மருது சகோதரரால் கட்டப்பெற்று, அவர்களது சமயப் பொது நோக்கின் சின்னங்களாக அவை விளங்குகின்றன. சத்திரங்கள் இராமேசுவரம் யாத்ரீகர்களுக்கு வசதியாக இம் மாவட்டத்தில் தொன்று தொட்டுச் சேது ரஸ்தா என்ற சாலையும் ஏராளமான சத்திரங்களும் நிலவி வருகின்றன. ராமேசுவரத்துக்குச் செல்லுவர்கள் நேரே இரயிலில் அல்லது மண்டபத்துக்குக் காரில் சென்று பிறகு இரயிலில் செல்லுகின்றனர். சேது ரஸ்தா நூறு ஆண்டுக் காலமாகப் பயன்படவில்லை. இப்போது அதுவே கிழக்குக் கடற்கரை யோரத்தில் தேசிய நெடுஞ்சாலையாக திருத்தி யமைக்கப் பெற்று வருகிறது. இந்நாளில் சத்திரங் களைப் பயன்படுத்துவோர் தொகை அருகியிருக்கிறது. சத்திரங்கள், தனிப்பட்டவர் உடைமையாகி பல விட்டன. இராமேசுவரம், குன்றக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிய தலங்களில் பல சத்திரங்கள் இன்றளவும் நன்கு நடைபெற்று வருகின்றன. ஆதீனங்கள் கோவிலூர் மடமும், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனமும், காளையார் கோவில் வேதாந்த மடமும் தேவிப்பட்டினத்திலுள்ள சிருங்கேரி சங்கர மடமும் முதுகுளத்தூர்ப் பகுதியிலுள்ள கோளரி மடமும் இம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஆதீனங்கள். இராமேசு