பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 லில் வாசிக்கப் பெற்று வரும் சேதுபதி பட்டயங்களி லிருந்து இவர்களுடைய வீரமும் புகழும் தெளிவாகத் தெரிகின்றன. தமிழ் மொழியைப் பேணியும், கோவில் களைக் கட்டியும், எண்ணிறந்த அறங்களைச் செய்தும் சேதுபதிகள் பெருமை பெற்றுள்ளனர். சேதுபதிகளின் உறவினராய் ஆங்காங்கு உள்ளவர் கள், செல்வாக்குப் பெற்று அவ்வப் பகுதியில் மறவர் சமூகத் தலைவர்களாக விளங்கி வந்திருக்கின்றனர். இவர் களுக்கு 'அம்பலம்' என்ற பட்டங்கள் உண்டு. தூவல்சாமி, பாண்டிக் கண்மாய்ச்சாமி, பட்டினம் காத்தான்சாமி என்பவர்கள் இராமநாதபுரம் வட்டத் தில் குறிப்பிடத்தக்க சமூகத்தலைவர்கள் ஆவர். இவர்கள் இராமநாதபுரம் அரச குடும்பத்துடன் கொள்வினை கொடுப்பினை உறவு பெற்று இப்பட்டத்துடன் விளங்கு கின்றனர். மறவர் தம் இனத்தைச் சுட்ட, பெயருக்குப் பின்னால் 'தேவர்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்து கின்றனர். இப்பொதுப் பெயர், இருபதாம் நூற் றாண்டில் சிறப்புப் பெயராக விளங்கி வருகிறது. பெயர் கூறாது 'தேவர்' எனின் அச்சொல் அரசியல் தலைவராக வும் நாவன்மை மிக்காராயும் விளங்கிய பசும் பொன் உ.முத்துராமலிங்கத் தேவரையே குறிக்கும். 1930 முதல் அவர் இறந்த 1964-ஆம் ஆண்டு வரை, மறவர் குலத் தலைவராய், தளபதியாய் முடிசூடா மன்னராய் அவர் விளங்கினார். . விழாக் காலங்களில் அம்பலப்பட்டம் பெற்றவர்கள் சிறப்பு மரியாதை பெறுவார்கள். அம்பலம் என அழைக் கப் பெற்ற சிறப்பு உடையவர்கள் அவ்வூரில் ஏற்படும் வழக்குகளுக்கு நீதிபதி போல் நின்று அறம் உரைப்பர்,